​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாகன சோதனையில் சிக்கிய தங்கத்தை போலீசார் பங்கிட்டதாக புகார்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக, வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை போலீசார் பங்கிட்டுக்கொண்டதாக கொள்ளையன் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளான். ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்காக அவனை மதுரை அழைத்து சென்ற போலீசார், இன்று மீண்டும் திருச்சி...

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனுக்கு 7 நாள் போலீஸ் காவல்...

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான திருவாரூர் முருகனை, 7 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த கொள்ளை வழக்குகள் தொடர்பாக பெங்களூரு போலீசார் திருவாரூர் முருகனை காவலில் எடுத்து...

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடியாமல் போலீசார் தவிப்பு

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடியாமல் திருச்சி போலீசார் தவித்து வருகின்றனர். திருச்சி லலிதா ஜுவல்லரி மற்றும் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்த...

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கில் சுரேஷை மேலும் ஒரு வாரம் விசாரிக்க அனுமதி

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக திருவாரூர் சுரேஷை 2வது முறையாக காவலில்  விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. திருச்சி லலிதா ஜூவல்லரியில் இம்மாதம் 2 ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக முருகன், சுரேஷ்,...

பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளையர்கள் கணேசன், சுரேஷை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளை தொடர்பான விசாரணைக்காக கொள்ளையர்கள் சுரேஷ் மற்றும் கணேசனை, தனிப்படை போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்தனர். பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய கணேசனை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் இன்று...

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 1.5 கிலோ நகைகள் மீட்பு

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், ஒன்றரை கிலோவை மதுரை மாவட்டம் சோழவந்தான் மலைப் பகுதியில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த கணேசனை, 5 நாள் காவலில் எடுத்து...

பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளை வழக்கு - காவல்துறை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேசை 7 நாள் காவலில் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த சுரேஷை,...

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் - போலீசார்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட சுரேஷை கடந்த 14ஆம் தேதி அன்று போலீசார் காவலில் எடுத்தனர். 7...

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தியதாக சுற்றுலா வேன் பறிமுதல்

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக சுற்றுலா வேன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை...

கொள்ளையன் கொடுத்த லஞ்சம்? - சிக்கும் காவல் ஆய்வாளர்?

பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சென்னையில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவரிடம் 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வைத்திருப்பதாக, பெங்களூர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனை அழைத்துக் கொண்டு சென்னை விரைந்துள்ளனர்.  திருச்சி...