​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 ஆண்டுகளுக்கு பிறகு பருவ மழையால் புத்துயிர் பெற்ற பறவை சரணாலயங்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் பசுமை இழந்து வெறிச்சோடி காணப்பட்ட பறவைகள் சரணாலயங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சரணாலயங்களுக்கு மீண்டும் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டுப் போய்...

மிரள வைத்த காளைகள்... அடக்கி பிடித்த காளையர்கள்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு களைகட்டியது. கோவையில் மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி...

டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம் காந்தன் ஆகியோரை மதுரை மாவட்டம் மேலூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் அருகில் விடைத்தாள்களை...

தப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்..! கொரோனாவுக்கு மருந்து என கதை

கொரோனா வைரஸுக்கு கனவில் மருந்து கண்டுபிடித்ததாக கூறி, மஞ்சப்பையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த  நம்ம ஊரு கொலம்பஸ் ஒருவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தார். 100 ஐன்ஸ்டீன்... 50 எடிசன்.... 20 கொலம்பஸ் போல புத்திசாலித்தனத்துடன்...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இளைஞர்

விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர், அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தனது காலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ஆம்...

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...

விவசாயத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை..!

விவசாயத்தை காக்கும் நடவடிக்கையாக தமிழக பட்ஜெட்டில் 11 ஆயிரத்து 894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல்...

நகைத் திருட்டு நாடகமும், தற்கொலையும்..!

ராமநாதபுரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரிகட்ட தன் வீட்டு நகையையே எடுத்து வங்கியில் அடமானம் வைத்துவிட்டு, யாரோ திருடிவிட்டதாக நாடகமாடிய நபர் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்றாங்கரை பகுதியைச் சேர்ந்த குத்புதீன் துணிக்கடை வைத்து நடத்தி...

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கில், நீதிமன்றம் தாமாக முன்வந்து மதுரை, தேனி, ராமநாதபுரம் விருதுநகர், சிவகங்கை ஆகிய...