​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விபத்தில் அடிபட்டவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விபத்தில் அடிபட்டவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், கடந்த 6ஆம் தேதி விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த...

ஹைதராபாத் விமானநிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

ஹைதராபாத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று பயணிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தாள்கள்...

ரஜினி பேட்டி......குழப்பமும் விளக்கமும்

பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்குத்தான் ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்திருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்து தெரியாத அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று பேட்டியளித்த ரஜினிகாந்த் பா.ஜ.க. மற்றும் 7 பேர்...

மதுராந்தகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த பாத்திமா என்ற பெண், தமது 10 வயது மகள் யாசின் மற்றும் உறவினர்களுடன்...

சென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரைவயதுக் குழந்தை சிறு காயத்துடன் உயிர்பிழைத்தது

சென்னை தியாகராயநகரில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை நல்வாய்ப்பாகச் சிறுகாயத்துடன் உயிர்பிழைத்துள்ளது. சென்னை தியாகராயநகரில் சிற்றம்பலம் அப்பார்ட்மென்ட் என்னும் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் அருண்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார். இவரின் ஒன்றரை வயது மகன்...

பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் - விஜயபாஸ்கர்

பன்றிக் காய்ச்சலால் மட்டுமே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவதில்லை என்றும், பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

ராமேஸ்வரம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீச்சு - 4 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

ராமேஸ்வரம் அருகே, கணவர் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்களை தடுக்கச் சென்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரத்தை அடுத்த ராஜீவ்காந்தி நகர் மற்றும் டி.எம்.எஸ் நகர்((D.M.S)) ஆகிய இரண்டு...

சென்னை முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க 1,20,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது - கே.விஸ்வநாதன்

சென்னை முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஒரு லட்சத்து இருபதாயிரம் கேமராக்கள்  பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். சென்னை பூக்கடை மற்றும் எஸ்பிளனேடில் உள்ள 1200 சி.சி.டி.வி. கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை சென்னை பூக்கடை காவல் நிலைய...

ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்த ஊழியர் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு

கடலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்த ஊழியர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். மஞ்சக்குப்பம் விவேகானந்தா நகரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால்,...

சென்னையில் நிமோனியா காய்ச்சலால் ஒன்றரை வயது குழந்தை பலி

சென்னையில் ஒன்றரை வயது குழந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவரின் ஒன்றரை வயது மகள் சிவஸ்ரீ-க்கு கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை,...