​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச கிசான் வேலைவாய்ப்பு கண்காட்சியில் அமைச்சர் நிலோபர் கபில் பங்கேற்பு

சர்வதேச அளவிலான வேலை வாய்ப்பு திறன்மேம்பாட்டு கண்காட்சி ரஷ்யாவில் உள்ள கசானில் நடைபெற்று வருகிறது. ஆக.22 முதல் 28 வரை நடக்கும் கசான் கண்காட்சியில் தமிழகத்தின் சார்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி...

210 யூடியூப் சேனல்களை முடக்கியது கூகிள்

ஹாங்காங்கில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக சீனாவின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் 210 யூடியூப் சேனல்களை கூகிள் முடக்கியுள்ளது. ரஷ்யா சமூகவலைதலங்கள் மூலம் பிற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக்கக் குற்றம்சாட்டப்படுவது போல், சீனாவும் அதே பாணியை பின்பற்றுவதாக வலைதள...

நவீன வசதியுடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள, உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அகடெமிக் லோமோனோசோவ் Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்கு பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது. இதனை செய்தியாளர்களுக்கு...

சீனாவைக் கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை என அமெரிக்கா விளக்கம்

சீனாவின் மோசமான நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனைகளைச் செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 1987-ம் ஆண்டு ரஷியாவுடன் போடப்பட்டிருந்த நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து கடந்த 18 ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தின் சான் நிக்கோலஸ்...

புதிய ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை காட்சிப்படுத்தியுள்ளது ஈரான்

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது. பாவர் - 373 எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த ஆயுதத்தை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஹாசன் ருஹானி ((Hassan Rouhani))உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்நாட்டு ஆயுத உற்பத்தியை அதிகரித்து தனது ஆயுத...

ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் விண்ணில் பாய்ந்தது

ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மனித ரோபோவுடன், இன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆய்வுக்காக ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில்,...

சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு சவாலானதாக இருக்கும் - சிவன்

சந்திரயான்- 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் விண்கலம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி நிலாவில் தரையிறங்குமென இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். வருகிற 2024 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  நிலாவை ஆராய இந்திய...

கூடங்குளத்தில் 3வது அணு உலைக்கான தளவாடப் பொருட்கள் வந்தன

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது அணு உலைக்கான தளவாடப் பொருட்கள் வந்துள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில் 3வது அணு உலை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் சமீபத்தில் வந்து சேர்ந்தன....

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் - அதிபர் டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் இணைந்து போராட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ரஷ்யா, துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் இந்தியாவும்...

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவைத் தெரிவித்துள்ளது. மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி கிழக்கு நாடுகளின் பொருளாதார மாநாட்டிற்காக ரஷ்யா...