​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவல்லிக்கேணி ரயில்நிலையத்தில் பயணியை கத்தியால் தாக்கி வழிப்பறி

சென்னை திருவல்லிக்கேணியில் ரயிலுக்காக காத்திருந்த பயணியை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 52 வயதான ராஜேந்திரன் சென்னை அண்ணாநகரில் மெஸ் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு பதினொன்றரை மணியளவில்...

ரயில்வே பாதுகாப்பு படையின் 33ஆம் ஆண்டு துவக்க நாள் விழா

ரயில்வே பாதுகாப்பு படையின் 33ஆம் ஆண்டு துவக்க நாள் விழா சென்னையில் நடைபெற்றது. அயனாவரத்தில் உள்ள ஆர்.பி.எஃப். பரேடு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷிரேஸ்தா ((R.K.Kulshrestha)) கலந்து கொண்டு, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மரியாதையை...

ஊட்டி மலை ரயிலுக்கு சவால் விடும் தைவான் மலை ரயில்

ஊட்டி மலை ரயிலுக்கு சவால் விடும் வகையில் தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மத்திய தைவானில் உள்ள அலிஷான் மலைப்பகுதியில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான வனப்பகுதிக்கு நடுவே கண்ணைக்...

பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தை கடந்து சென்ற கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பல்

ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தை, கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மற்றும் படகுகள் கடந்து சென்ற காட்சியை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பலின் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்ததால், அதை கேரளாவைச் சேர்ந்த...

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியை நிறுத்திவைக்கக் குஜராத் விவசாயிகள் கோரிக்கை

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதிவழங்காமல் நிறுத்திவைக்கக் கோரி ஜப்பான் அரசுக்குக் குஜராத் விவசாயிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். மும்பை - அகமதாபாத் இடையே 508கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைத்துப் புல்லட் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் அரசு ஒரு...

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோ மற்றும் இணைய தளத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா முன்னிலையில் இந்த லோகோ வெளியிடப்பட்டளது. அனைத்து ரயில்கள்,...

புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

மும்பை-அகமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரம் விவசாயிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். புல்லட் ரயிலால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தும்படி கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, விவசாயிகளின் மனுக்களை உயர்நீதிமன்றம்...

ரயில்வே மருத்துவமனைகளில் சிசிடிவி, வைஃபை வசதிகள்

ரயில்கள், ரயில் நிலையங்களை தொடர்ந்து, ரயில்வே மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 125 ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன.  பாதுகாப்புக்காக அந்த மருத்துவமனை வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை...

வேலூர் வாணியம்பாடியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக தொடங்கக் கோரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ரெட்டித்தோப்புப் பகுதியையும் ஆம்பூரையும் இணைக்கும் பாதையில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. தண்டவாளம் அமைக்கப்பட்டபோது பாதையின் குறுக்கே கட்டப்பட்ட குறுகிய...

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஓடத் தொடங்கியது

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியுள்ளது. பிரான்சின் அல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் ரயில், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள குசாவன் (Cuxhaven) நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த...