​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சி.பி.ஐ.க்கு புதிய இயக்குநரை நியமித்தது மத்திய அரசு.. ஏற்கனவே பணியில் இருந்த இயக்குநரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு

சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனரிடையே மோதல் வெடித்ததையடுத்து, புதிய சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு...

அண்ணாமலை பல்கலை. முன்னாள் துணை வேந்தர், பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

ஓய்வூதிய நிதியில் 40 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருவரும் தாங்கள் பதவி வகித்த காலகட்டத்தில், பணியாளர்களின் ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில்...

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தல்

மெகுல்சோக்சி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மெகுல்சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனின் சட்ட நிறுவனம், சட்ட ஆலோசனை வழங்குவது தொடர்பாக 24 லட்ச ரூபாய் பெற்றதாக, காங்கிரஸ்...

மெகுல் சோக்சி நிறுவனத்திடமிருந்து அருண்ஜேட்லி மகள்- மருமகனுக்கு சொந்தமான சட்ட நிறுவனம் ரூ.24 லட்சம் பெற்றதாக காங். குற்றச்சாட்டு

பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான சட்ட நிறுவனம் 24 லட்ச ரூபாய் பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி அம்பலமாகி,...

இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற மர்ம நபர்

சென்னையில் ஓ.எல்.எக்ஸ். தளத்தில் விற்பனைக்கு வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாகக் கூறி, திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். ஏழுகிணறைச் சேர்ந்த அப்துல் அஃப்ரீன் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான...

சிபிஐ சிறப்பு இயக்குனர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த சூழலில், சிறப்பு இயக்குனர் மீதே சிபிஐ வழக்குப்பதிவு

சிபிஐ இயக்குனர், சிபிஐ சிறப்பு இயக்குனர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த சூழலில், சிறப்பு இயக்குனர் மீதே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை...

சரிதா நாயரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு

நடிகை சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துக் கொண்டதாக கேரள முன்னாள் முதலமைச்சர் உமன் சாண்டி மீது கேரள போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கான கிரிமினல் விசாரணை தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா...

மதுரையில் கடன் கேட்டவருக்கு கள்ளநோட்டுகளை கொடுத்த கும்பல்

மதுரையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கொடுத்து 30 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மளிகை மொத்த வியாபாரியான வரதராஜன், புதிதாக தொழில்...

நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டவரை ஏமாற்றியவர் கைது

டெல்லி அருகே நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டினரை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள நொய்டா 63ஆவது செக்டாரில் சகில் வர்மா என்பவர் ஒரு கால் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த கால் சென்டரில் இருந்து கனடா...

மகாராஷ்ட்ராவில் இணையதளம் மூலம் செல்போன் வாங்கியவருக்கு, செங்கல் கிடைத்ததால் பரபரப்பு

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இணையதளம் மூலம் செல்போன் வாங்கியவருக்கு, செங்கல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் அவுரங்காபாத் நகரின் ஹட்கோ குடியிருப்பில் வசித்து வரும்  கஞ்சனன் காரத் என்பவர் கடந்த 9-ஆம் தேதி அன்று செல்போன் வாங்குவதற்காக பிரபல இணையதள நிறுவனத்தில்...