​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்...

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு திட்டம்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ளும் வகையில், புதிய குழுவை  அமைத்துள்ள மத்திய அரசு, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 92 ஆயிரம் கோடி ரூபாயாக...

சர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்.!

கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் துர்கா...

மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மால்டா மாவட்டம் ஜகநாத்பூர் என்ற இடத்தில் இருந்து பீஹார் மாநிலம் முகுந்தப்பூர் என்ற இடத்துக்கு மஹானந்தா ஆற்றில் பயணிகளுடன் தனியார் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில்...

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

சாரதா நிதி நிறுவன சீட்டுத் திட்ட மோசடி வழக்கில், கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சீட்டுத்திட்ட மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது....

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை சந்திக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சாரதா நிதி முறைகேடு வழக்கு, குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து...

வேலைவாய்ப்பில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் போராட்டம்

மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாகக் குற்றம்சாட்டி ஹவுராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். தடையை மீறி முன்னேறிச் சென்ற அவர்களை...

புதிய வாகன சட்டத்தின்படி வசூலிக்கப்படும் அபராதத் தொகை குறைப்பு

குஜராத்தை பின்பற்றி கர்நாடகத்திலும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை வெகுவாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியுள்ள மத்திய அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை பத்து மடங்குக்கும் மேலாக...

குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஒருவன் சென்னையில் கைது

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேற்குவங்க நபரை, அம்மாநில போலீசாரும் என்ஐஏ அதிகாரிகளும் இணைந்து சென்னை நீலாங்கரையில் கைது செய்துள்ளனர். மேற்குவங்கத்தை சேர்ந்த ஷேக் அசதுல்லா என்ற நபரை, அம்மாநில போலீசார் வழக்கு ஒன்றில் தேடி வந்துள்ளனர். அந்த நபர் சென்னை...

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் - கேரள அரசு நிறுத்தி வைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் நடுத்தர குடும்பங்கள் இச்சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில்...