​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர்  திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  திருச்செந்தூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம்  நெல்லையப்பர் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு...

ஒரே மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேன் கூடுகள்

மூணாறு அருகே ஒரே மரத்தில் தேனீக்களால் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேன் கூடுகளை சுற்றுலாப்பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மூணாறிலிருந்து மாட்டுப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள கொரண்டிக்காடு பகுதியில் உள்ள மிளகுநாரி மரம் ஒன்றில் ஏராளமான தேன்கூடுகள் உள்ளன. அப்பகுதியில் ஏராளமான மரங்கள்...

வெடிவைத்து பாறை தகர்ப்பு... பெரிய மலையே சிதைந்த அவலம்

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், பாறையை வெடி வைத்து தகர்த்து, சாலை விவாக்கப் பணி மேற்கொள்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. போதிய திட்டமிடல் இன்றி நடைபெற்ற பணியால் பெரிய மலைப்பகுதியே சிதைந்து அபாயகரமான நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் மூணாறு...

மூணாறு பண்ணை வீட்டில் கணவன் கொன்று புதைப்பு..! மனைவி மேலாளருடன் எஸ்கேப்..!

மூணாறு அருகே பண்ணை வீட்டில் கணவனை கொலை செய்து புதைத்து விட்டு, பண்ணை வீட்டு மேலாளருடன் தலைமறைவான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலீசுக்கு வாட்ஸ் அப்பில் வாக்குமூலம் அனுப்பப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கேரள மாநிலம் சாந்தன்பாறையை...

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்திய படையப்பா

கேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை, ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்தை முடக்கி வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்தியது. படையப்பா என்ற பெயர் கொண்ட அந்த யானை, இதுவரை 13 பேரை தாக்கி கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது....

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

கேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற  உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம்...

அரண்ட வனத்துறை அலுவலர்கள்..! குழந்தையை மீட்ட ஆட்டோ ஓட்டுனர்

கேரளாவில் கடந்த மாதம் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஜீப்பில் இருந்து விழுந்த சம்பவத்தில், அந்தக் குழந்தையை “பேய்” என நினைத்து வனத்துறை அலுவலர்கள் உறைந்துபோய் நின்றிருக்க, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து காப்பாற்றியது அம்பலமாகியுள்ளது.  கேரள மாநிலம் மூணாறு அருகே கம்பிளி கண்டம்...

புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் ஆபத்தை உணராமல் சாகசப்பயணம்?

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கேரள மாநிலம் மூணாறு பகுதிகளில் ஆபத்தான முறையில் சுற்றுலாப்பயணிகள்  ஜீப் சவாரிகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது வாகமண் சுற்றுலாத்தலம். பசுமையும், குளுமையும் சூழ்ந்து ஆண்டுதோறும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை...

மூணாறு, மறையூர் பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

கேரளாவில் சந்தன மரம் வெட்டிக் கடத்தியது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். மூணார் மற்றும் மறையூர் சுற்றுவட்டார பகுதிகளில்  சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்தக் கும்பலில் மணிவேல்...