​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டு வீசியும் தப்பிய பிரபல குற்றவாளி நீராவி முருகன் கைது

தொழில் அதிபரை கடத்திய வழக்கில் பிடிபட்ட பிரபல குற்றவாளியான நீராவி முருகன், ராசிபுரம் அருகே போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டு வீசியும் தப்பிய வழக்கில், மீண்டும் கைது செய்யப்பட்டான். கடந்த 2018 ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த...

முடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.! துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர் பதவி குறித்து விமர்சித்த துரைமுருகன், முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னை மெரீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள்தான் என்று கூறும் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவாரா என துரைமுருகன்...

கலைஞர் வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் வாரிசு அரசியலா? - துரைமுருகன் கேள்வி

கலைஞர் வீட்டில் இருந்து வந்தால் மட்டும் தான் வாரிசு அரசியலா என்றும், தேசிய தலைவர்கள் பலரது வீட்டிலிருந்தும் வந்தால் அது வாரிசு அரசியல் ஆகாதா என்றும், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் பனமரத்துப்பட்டியில் இயங்கும் எம்-சாண்ட் குவாரியை, சட்டமன்ற...

தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிசேகத்திற்கான பணிகள் தீவிரம்

கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. அந்த கோவிலில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும்,...

இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்ததால் நிகழ்ந்த விபத்து

புதுச்சேரி அருகே மூன்று பேருடன் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அடுத்த நொடி அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடலூரை சேர்ந்த முருகன் என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் இருவருடன்...

நடி ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்

கோவை அவினாசி சாலையில் டெம்போ டிராவலர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. பீளமேடு அருகே பன்மால் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டெம்போ டிராவலர் ஒன்றின் முன்புறத்தில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்...

ஸ்டார்ச், ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

சேலத்தில் ஸ்டார்ச், மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆலைகளில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசியாக தயாராகிறது. அவற்றை சேகோசர்வ் எனப்படும் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு...

பழனி முருகன் கோயிலில் மூலவர் சிலைக்கு மருந்து சாத்தப்படுவதால் நடை அடைப்பு

பழனி முருகன் கோயில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி இன்று  நடைபெறுவதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது 4 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பழனி கோயிலில் கும்பாபிசேக திருப்பணிகள்   நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மூலவர் பீடத்திற்கு  13...

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று முதல் அமலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்து பெற்றதாகும். அதன்படி...

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை-துரைமுருகன்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொதுமக்களுடன் பொங்கல் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,...