​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா ஊழல் வழக்கில், எஸ்.பி. ஜெயக்குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டம் என தகவல்

குட்கா ஊழல் வழக்கில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையராக...

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை - சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறைஅமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் உள்ளிட்ட 10 இடங்களில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர்...

குட்கா விவகாரத்தில் தாம் நேர்மையாக பணிபுரிந்து உள்ளதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் விளக்கம்

குட்கா விவகாரத்தில் தாம் நேர்மையாக பணிபுரிந்து உள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்து தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், பணம்...

குட்கா ஊழல் வழக்கில் திட்டமிட்டு தம்மை சிக்க வைத்ததாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் குற்றச்சாட்டு

குட்கா ஊழல் நடந்துள்ளதாக ஒப்புகொண்ட சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஆனால் லஞ்ச பணம் கைமாறியதாக கூறப்படும் தேதிகளில் தான் காவல் ஆணையராக இல்லையென்றும், தான் டிஜிபி ஆவதை தடுக்கவே சிக்க வைக்கப்பட்டதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.  குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை...

சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 5 பேர் அதிரடி கைது

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. " குட்கா முறைகேடு வழக்கில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் அண்மையில் சிபிஐ 12...

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 35 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

குட்கா முறைகேடு வழக்கில்  35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த 2013ஆம் ஆண்டு தடை...

குட்கா வழக்கில் அடுத்த கட்டம் என்ன?

குட்கா முறைகேடு வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர். பான் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற...

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக DGP டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும்,...

அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கு குறுக்கு விசாரணை மற்றும் மறு விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.  வரும் 4-ஆம் தேதி ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா மற்றும் மாதவன், திருப்பரங்குன்றம் இடைத்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்களான திவாகரனின் மகள், மருமகன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்களாக இருக்கும், திவாகரனின் மகளும், மருமருகனும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அப்போலோவில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்களை விசாரித்து...