​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில், தமிழ்நாடு அரசின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை...

ராயப்பேட்டை மருத்துவமனையில் இன்சுலினோமா புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை

இன்சுலினோமோ எனப்படும் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சுயநினைவின்றி அடிக்கடி மயங்கி விழுதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளான சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஜம்ஷத் பேகம் என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் ராயப்பேட்டை...

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது - பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சிசிடிவி பதிவு ஏதும் தங்களிடம் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மருத்துவ கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி பங்கேற்றார். அப்போது...

டபுள் டக்கர் பேருந்து மரத்தில் மோதிக் கவிழ்ந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் டபுள் டக்கர் பேருந்து மரத்தில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நகான் ரட்சசீமா ((Nakhon Ratchasima)) மாகாணத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற 50 பேர் டபுள்டக்கர் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தப் பேருந்து மலைச் சரிவில் சென்று கொண்டிருந்த...

குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுத்தீயில் சிக்கியதில் 17 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று...

மர்மநபர்கள் செயின்பறித்தபோது கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே மர்மநபர்கள் செயின்பறித்தபோது கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மல்லிகா, நேற்று முந்தினம் பணிமுடித்து தனது கணவர் வீராசாமியுடன்...

10 கோடி குடும்பங்கள் பயனடையும் சுகாதாரத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் பத்து கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் 50 கோடிப் பேர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையின்போது...

சசிகலா பிரமாணப் பத்திரத் தகவல்கள் என வெளிவந்த தகவல்கள் தவறானவை - ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதாக வெளிவந்தவற்றில் பெரும்பாலான தகவல்கள் தவறானவை என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றதாகக் கூறி ஆங்கில நாளிதழில்...

காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 26 பேர் பலி; 18 பேர் படுகாயம்

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெர்ஷியன் புத்தாண்டு விடுமுறைக்காக கார்ட்-ஈ-ஷகி (Kart-e-Sakhi) என்ற புனிதத்தலத்துக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அந்த இடத்திற்கு அருகே மர்ம நபர் ஒருவர் மனித குண்டாக வந்து தம்மிடம் இருந்த குண்டை...

இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த இளைஞர் சாலைத் தடுப்பில் மோதி பலி

சென்னை சேப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த இளைஞர் சாலைத் தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை பல்கலைக்கழக நுழைவாயில் அருகே உள்ள வளைவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அதி வேகத்தில் வந்தவர்கள், எதிரே இருந்த...