​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராசிபுரத்தில் இளம்பெண் தற்கொலை - கொலை செய்ததாக கணவன் வீட்டாரை பெண்ணின் உறவினர்கள் தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி பெண்ணின் உறவினர்கள், மாப்பிள்ளை வீட்டாரை சரமாரியாகத் தாக்கினர். ராசிபுரத்தை அடுத்த தண்ணீர்பந்தல்காட்டை சேர்ந்த அருள்ராஜுக்கும், சேலம் குரால்நத்தத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...

சாகர் கவாச் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்

திருவள்ளூர் அருகே சாகர் கவாச் ஒத்திகை பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மப்பேடு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த கோபி, பழவேற்காடு - பொன்னேரி சாலையில் போளாச்சியம்மன் குளம் சோதனை சாவடியில் சாகர் கவாச் ஒத்திகையையொட்டி பாதுகாப்பு பணியில்...

பாம்பு கழுத்தை இறுக்கியதால் மயங்கி விழுந்த பாம்பு பிடிப்பவர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதில் பாம்பு பிடிப்பவர் மயங்கி விழுந்தார். மாவ் ((Mau))நகரின் ஒரு இடத்தில் மலைப்பாம்பு இருப்பதாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்து மலைப்பாம்பைப் பிடித்த அவர், பொதுமக்களுக்கு தனது வீரசாகசத்தை காட்ட பாம்பை தனது கழுத்தில்...

குரங்கணி காட்டுத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.  குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கியதில், நேற்று வரை...

அப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்

அப்பல்லோவில் சிசிடிவிக்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம்தான் பதிலளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் சிசிடிவி கேமராக்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தது குறித்து டிடிவி...

சிண்டிகேட் வங்கி மேலாளர் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய சோகம்

திருச்சியில் சிண்டிகேட் வங்கியின் மேலாளர் ஒருவரும், அவரது குழந்தையும் தூக்கில் தொங்கிய நிலையில், மேலாளரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  சிண்டிகேட் வங்கியின் SRC கிளை மேலாளரான ராமசுப்பிரமணியன், அதே பகுதியில் கணேஷ் தர்ஷன் அபார்ட்மென்டில் வசித்து வந்தார். வியாழனன்று...

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், அது எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும்...

பீகாரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை பெற்ற பெண் பலி

 டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண், பரிதாபாமாக உயிரிழந்தார். மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு காக்கி சட்டை அணிந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் காட்சிகள் இரு தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக...

மருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை,...

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில், தமிழ்நாடு அரசின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை...