​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அருகே தெரு நாய்களுக்கு உணவு அளிக்க சென்றவர்மீது மின்கம்பி சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.  சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த சேது என்பவர் அதே பகுதிதில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். கடந்த 2017ம் ஆண்டில் இவரது டெல்லி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடியே 59 லட்சம் ரூபாய் தொடர்பாக 4 நாட்கள்...

டிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..! வாகன சோதனை பரிதாபங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் முன்னாள் கவுன்சிலரின் மகன் பறித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து சாலைமறியலில்...

கொலம்பியாவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்

கொலம்பியா நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். அந் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று, லொப்ஸ் நகருக்கு...

குப்பைத் தொட்டியாக மாறிய திருமணி முத்தாறு..!

சேலம் மாநகரின் கழிவுகள் கலப்பால், திருமணிமுத்தாறு தனது புனிதத்தை இழந்து கூவம் போல் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் முத்துச் சிப்பிகள் கொட்டிக் கிடந்த திருமணிமுத்தாற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு செய்தித் தொகுப்பு.  தருமபுரி மாவட்டம் சேர்வராயன்...

பஞ்சர் ஆன கார் டயரை சரிசெய்துகொண்டிருந்தபோது பேருந்து மோதி மருத்துவர், கார் ஓட்டுநர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ராவில், பஞ்சர் ஆன கார் டயரை பழுதுபார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வந்த பேருந்து ஒன்று மோதியதில் மருத்துவர் மற்றும் கார் ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர். புனேவில் செயல்பட்டுவரும் மருத்துவமனையொன்றில் மருத்துவராக பணியாற்றிவந்த கேதன் ஸ்ரீபத் குர்ஜேகர் (Ketan Shripad Khurjekar) என்பவர், மும்பையில் நடைபெற்ற...

அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமேஷ்வரன். இவர் இரண்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில்...

சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் போபாயன் நகரத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டும் வசிக்கும் மலைகள் சூழ்ந்த நகரம்  போபாயன். அங்கு உள்ள விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புக்குள் விழுந்து...

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..!

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ் (Kodela Sivaprasada Rao), ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார். ஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக...

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டல பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று சுற்றுலா படகு ஒன்றில் 71 பேர் பயணம் செய்தனர். அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து...