​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தின விழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கப்படி, தேசியக் கொடியேற்றப்பட்டது. கோவில் தீட்சிதர்கள் மேளதாளத்துடன் மூவர்ண தேசிய கொடியை எடுத்துச் சென்று, கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள். தொடர்ந்து 73 ம் ஆண்டு...

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நட்ட குடியிருப்புவாசிகள்

கோவையில், குடியிருப்பு பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சரவணம்பட்டி கார்த்திக் நகரில் 500 குடியிருப்புகள் உள்ளன. இங்கு பூங்காவிற்கென ஒதுக்கப்பட்டுள்ள, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில், மரக்கன்றுகள் நடுவதற்காக, கோவை சாரலின் விழுதுகள்...

மரங்கள் வளர்ப்பில் மாணவர்களின் ஈடுபாடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்சி வரும் மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை...

ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி

கும்பகோணம் அருகே ஒரே இடத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பறவைகளின் புகலிடமாக மாற்றியுள்ளனர் தம்பதி ஒருவர். நீங்கள் காணும் இந்த இடம் கும்பகோணம் புறவழிச்சாலை. ஓங்கி வளர்ந்த மரங்களை அகற்றி பசுஞ்சோலைகள் எல்லாம் வெறுமையாக காட்சியளிக்கும் நிலையில், கடந்த ஆண்டு வரை பொட்டல்காடாக...

ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு எத்தியோப்பியா உலக சாதனை

எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக...

நீர்நிலைகளை அப்துல் கலாம் பாதுகாக்கச் சொன்னார் - விவேக்

அரிவாளையும் பட்டா கத்தியையும் தூக்கிக்கொண்டு கலவரம் செய்பவர்கள் மாணவர்கள் அல்ல என்றும் அதே அரிவாளைக் கொண்டு பள்ளம் தோண்டி மரக்கன்றுகளை நடுபவர்களே சிறந்த மாணவர்கள் என்றும் நடிகர் விவேக் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி...

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அதிகாரிகள் நடத்திய ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பள்ளியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிகாரிகள் ஆய்வின் போது 30 மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஒரே ஒரு மரக்கன்று மட்டுமே நடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆனந்தி வெங்கடேசன்...

வனம் என்ற தனியார் அமைப்பு சார்பாக 2500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நாகை மாவட்டம் வலிவலத்தில், கஜா புயலால் இழந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக  தனியார் அமைப்பு சார்பாக சுமார் 2500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. கஜா புயலால் இழந்த மரங்களை மீட்கும் முயற்சியில் வனம் என்ற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், அவ்வமைப்பு...

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தூர்வாரப்படும் ஏரி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தூர்வாரப்படும் ஏரியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பார்வையிட்டார். திருச்செங்கோட்டை அடுத்த மேற்கு பள்ளிபட்டியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை கொங்கு நாடு மக்கள்...

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி சாடியுள்ளார். வாரணாசி விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர் வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் மோடி...