​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5, 8ஆம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களின் நிலை என்ன? உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தையின் நிலை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில், அடிப்படைக் கல்வியை மாணவர்கள் தரமானதாக உட்கிரகிக்க வேண்டுமென்றே...

வரும் 20-ஆம் தேதி 2000 மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இருந்து தேர்வு பெற்றுள்ள 2000 மாணவர்களுடன் பிரதமர் மோடி 20 ஆம் தேதி கலந்துரையாடுகிறார். பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில்,...

பல்கலை.களின் வளர்ச்சி, மேம்பாடு குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆலோசனை நடத்தினார். ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ள அவர் தலைமையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனையில், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து...

கல்வி நிறுவனங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் வேண்டுகோள்

கல்வி நிறுவனங்களில் அரசியல் செய்வதை விட்டுவிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்டின் டேராடூனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...

பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் - மத்திய அமைச்சர்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அவர், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக்...

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், நிதிப் பங்கீட்டுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சீர்மிகு...

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 300 சதவீதம் வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த 15 நாட்களாக மாணவர்கள் தொடர்...

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது- இதே போல்...

கல்லூரிகளுக்கு கட்டாயமாகிறது நாக் அங்கீகாரம்..!

அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும்...

இந்தியாவின் இளைய தலைமுறை மீது உலகமே எதிர்பார்ப்பு வைத்துள்ளது - பிரதமர் மோடி

இந்தியா மீதும், இந்தியாவின் இளைய தலைமுறை மீதும் உலகமே நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பை வைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில் அதற்கு மாணவ, மாணவிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும்...