​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிவினைவாதிகள் நலன்கள் குறித்துதான் ராகுலுக்கு அதிக கவலை - முக்தர் அப்பாஸ் நக்வி

நாட்டின் நலன்களைக் காட்டிலும், பிரிவினைவாதிகளின் நலன்கள் குறித்துதான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிக கவலைப்படுவதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா அண்மையில் பொது பாதுகாப்புச்...

சுற்று வட்டச் சாலை - கடனுதவிக்கு ஒப்புதல்

தச்சூரையும், ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சுற்றுவட்டச் சாலைத் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஒபெக் சர்வதேச மேம்பாட்டு நிதியத்திடம் இருந்து 3,400 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் தச்சூரையும்,...

புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை ஓரிருநாட்களில் அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு சரிந்துவிட்டது. இதனை சரிசெய்ய மத்திய அரசு மூன்று அம்ச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ரியல் எஸ்டேட்,...

இந்தியா-பாக் உறவில் நல்ல முன்னேற்றம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹூஸ்டன் நகரில் 22ம் தேதி நடைபெறும்...

அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை அணுக கேரளா அரசு முடிவு

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை அணுகுவது என கேரளாவில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்து 20ம் தேதிக்குள்...

பிளாஸ்டிக் - மாநில அரசுகளுக்கு கெடு..!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பைகளின் உற்பத்தியை நிறுத்த அக்டோபர் 2ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை...

கச்சா எண்ணை விலை உயர்வு.. இந்தியாவிற்கும் பாதிப்பு..!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த 14 ஆம் தேதி ஆளில்லா விமானங்கள்...

தந்தை கொண்டு வந்த சட்டத்தின்கீழ் பரூக் அப்துல்லா மீது வழக்கு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மீது பதிவு செய்யப்பட்ட பொது பாதுகாப்புச் சட்டத்தை அவரது தந்தையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சேக் அப்துல்லாதான் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மரக் கடத்தல்காரர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு...

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், சென்னையை அடுத்த ஓஎம்ஆரில் 27 லட்சம் சதுர அடியில் 17 ஆயிரம் பேர் பணியாற்றக்...

ஆராய்ச்சி படிப்பை உலகத்தரத்தில் மேம்படுத்த திட்டம் - விஐடி பல்கலைக்கழகம்

Institutions of Eminence என்ற மாண்புமிக்க கல்வி நிறுவனம் அந்தஸ்தை பயன்படுத்தி மாணவர்களுக்கான ஆராய்ச்சி படிப்பை உலகத்தரத்தில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 'Institutions Of Eminence என்ற சிறப்பு அந்தஸ்தை பெறும் அரசு கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி...