​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை

திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருச்சி திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம், சர்க்கார்பாளையம், மாம்பழச்சாலை,குடமுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமாக மழை பெய்தது. விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும்...

ஓடுபாதையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு

மதுரை விமான நிலைய ஓடுபாதையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக தனி குழு அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையம், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பன்னாட்டு விமானங்களான...

எட்டு வழிச் சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவதில்லை

சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்தவொரு பணியும் நடக்கவில்லை என்றும், இது மத்திய அரசின் திட்டம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நெல்லையில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்ல நிர்வாகிகள் திருமணத்துக்கு செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி...

தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை ரத்து செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடற்தொழில் திட்டத்தை ரத்து செய்ய, பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...

ஒரே நாளில் அமித் ஷாவை 2 முறை சந்தித்த ஓ.பி.எஸ்

தே.மு.தி.கவுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மதுரையில் அமித் ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எத்தனை தொகுதிகள் என்பதை தோராயமாக கூறி பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு தே.மு.தி.க கூறி வருகிறது- ஆனால் அது...

மதுரையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் OPS சந்திப்பு

மதுரை விமான நிலையம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்க்காக மதுரை வந்திருந்த அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் 10...

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டக் கோரிய வழக்கில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டுவது தொடர்பாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க  விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையின் சிறப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளங்குவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். விமான நிலையத்துக்கு பல்வேறு சாதிய  தலைவர்களின்...

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். ஆயிரத்து 264 கோடி ரூபாயில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி காலை 11.30 மணி அளவில் தனி விமானம்...

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகை, ஆயிரத்து 264 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் மோடி இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 202 ஏக்கரில் சுமார் 750 படுக்கைகள் வசதியுடன்...

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள இடத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அங்குள்ள தோப்பூரில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. வரும் 27 ஆம் தேதி நடைபெற...