​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை 2வது நாளாக நீடிப்பு

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை  இன்றும் நீடித்து வருகிறது. தேனியில் நடைபெற்ற சோதனையில் 250 ஏக்கர் நில ஆவணங்கள், ஹார்ட்  டிஸ்க்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...

“நட்பெல்லாம் நட்பல்ல” - தொழிலதிபர் கடத்தலின் பின்னணி

ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபருடன் நட்பாகப் பழகி, பொருளாதார பின்னணி குறித்து தெரிந்துகொண்டு அவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி சித்ரவதை செய்த சேலத்தைச் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட்...

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்கை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம்

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த, அரசுக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த 2017-ல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக்...

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நேற்று வெடிகுண்டுகள் அடங்கிய மர்ம பை ஒன்று...

SSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..!

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால்...

வேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்...

டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால் செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது?

டாஸ்மாக் கடை வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவர கூடாது என்று தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை இடமாற்றம் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி,...

நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து

விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்ததில் லோயர் பர்த்தில் உறங்கிய 70 வயது முதியவர் காயத்துடன் உயிர் தப்பினார். நேற்று இரவு சென்னை தாம்பத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியின் லோயர்பெர்த் ஒன்றில் தர்மராஜ் என்பவர் பயணம்...

மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை ஒட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மங்களூர் விமான நிலையத்தில் இரு இடங்களில்...