​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மணிமுத்தா ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மணிமுத்தா ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சங்கராபுரம் வட்டாரத்தில் பரமநத்தம், கீழப்பட்டு,பிச்சநத்தம், வளையாம்பட்டு, கல்லேரிக்குப்பம் ஆகிய ஊர்களில் மணிமுத்தா ஆற்றின் கரைப்பகுதியில் பட்டநிலங்களைக் குத்தகைக்கு எடுத்துச் சிலர் செங்கல்சூளை நடத்தி வருகின்றனர்....

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... உறவினரே கூலிப்படை மூலம் கொலை செய்திருப்பது அம்பலம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் உறவினரே கூலிப்படை மூலம் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. உறவினரைப் பார்த்து மாடு போல் குணம் உள்ளதாக கூறியதால் பெண்ணை ஒருவர் கூலிப்படையினர்...

ஹைதராபாத் அருகே பட்டப்பகலில் நடுச் சாலையில் பொதுமக்கள் மத்தியில் கொடூர கொலை

ஹைதராபாத்தில் 11 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் வகையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நபர் பட்டப்பகலில் நடுச்சாலையில் பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாதில் உள்ள ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் மகேஷ் இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்...

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் முதல் ஆசிய நாடாக மலேசியா உருவெடுக்கவுள்ளது

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் முதல் ஆசிய நாடாக மலேசியா உருவெடுக்கவுள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இளைஞருக்கு மலேசியாவில் கடந்த மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழவே,...

நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் இதுவரை எவரும் தட்டிக்கேட்கவில்லை என தனுஸ்ரீ குற்றச்சாட்டு

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து இதுவரை எவரும் தட்டிக் கேட்கவில்லை என்று என்று நடிகை தனுஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார் விஷாலில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ. கடந்த 2008-ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே...

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டு பின்னர் குறைத்ததைப்...

கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் மின் தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மூலச்சல் மற்றும் செம்பொன்விளை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட தக்கலை அழகியமண்டபம், திங்கள்நகர், குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில்...

கோவை அருகே கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

கோவை கணபதி அருகே நேற்று பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. கணபதி...

ஊதிய உயர்வுகோரி புதுச்சேரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த ஊதியத்தை காலத்தோடு வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற் சங்கத்தின் கூட்டம்...

தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 3,500 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல்

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரியான...