​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து

கோவை மாவட்டம் கவுண்டம்பாளைம் பணிமனையில் இருந்து வெளியே வந்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று மின்கசிவு காரணமாக கொளுந்து விட்டு எரிந்து சேதமடைந்தது. கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை பராமரிக்கும்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் பயணம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர். பொங்கலைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பயணிகள் தலையாகக் காணப்பட்டது. முன்பதிவு...

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு

காணும் பொங்கலன்று அதிகளவில் மக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி மெரினா மற்றும் பெசன்ட் கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் தடுப்பு வேலிகள்...

பொங்கலை முன்னிட்டு 4.53 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம்

பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து தற்போது வரை 4 லட்சத்து 53 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர். சென்னையில் இருந்து பொங்கலை கொண்டாட தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக, வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் அரசுப் போக்குவரத்து...

குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்

குறைந்த கட்டணத்தில், சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் வால்வோ குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 28 ரூபாயாக உள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் 15 ரூபாய்...

சென்னையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். சென்னை மாநகரில் பொங்கல் பண்டிகை முதல் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன...

கார்த்திகை தீபத்திருவிழா: மலை மீது மாலையில் மகாதீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை  தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம்...

கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை காத்திகை தீப விழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இரண்டாயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 10ம் தேதி கார்த்திகை தீபம் நடைபெறுவதை முன்னிட்டும், 11ம் தேதி...

அரசு சொகுசு பேருந்துகளின் விளம்பரத்தை நம்பிச் சென்ற பயணி கடும் அவதி

விளம்பரம் மட்டும் செய்துவிட்டு, ஏசி, செல்போன் சார்ஜ் வசதிகளை வழங்காத புகாரில், பாதிக்கப்பட்ட பயணிக்கு மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகம், 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, ஜல்னா மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு போக்குவரத்து கழகத்தின்...

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து 55 பேருந்துக்களும், திருச்சி,...