​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எதிராக நூதன போராட்டம்

தெலங்கானா மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 40 ஆயிரம் போக்குவரத்து கழக ஊழியர்களை பணி நீக்கம் செய்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார். எனினும் கோரிக்கைகளை வலியுறுத்தி...

தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 24 நாட்களாக வேலைநிறுத்தம்

தெலங்கனா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 24 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பெண் நடத்துனர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள்...

போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்தபடி போனஸ் வழங்கப்படும்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி தீபாவளி போனஸ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் முன்னதாக புதன்கிழமை தீபாவளி முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர்,...

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியராக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 நாட்களாக அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்த...

தெலங்கானாவில் தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மக்கள் கடும் அவதி

தெலங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பதினைந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், வாடகைக் கார் ஓட்டுநர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தெலங்கானா சாலை போக்குவரத்து கழகத்தை முழுமையாக அரசுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர்கள்,...

பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 9 வது நாளை எட்டியுள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

அரசு பேருந்தில் ஓசி பயணம், காவலரால் நடத்துனர் பலி…! பயணிகள் திடுக் குற்றச்சாட்டு

கடலூர் அருகே அரசு பேருந்தில் ஓசியில் பயணம் மேற்க்கொண்ட போலீஸ்காரர் ஒருவர், டிக்கெட் எடுக்கச்சொன்ன நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நடத்துனர் மயங்கி விழுந்து பரிதாப பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று...

வடபழனி பணிமனையில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை வடபழனியில், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார். சென்னை வடபழனி பணிமனையில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நிகழ்ந்த விபத்தில் சுவர் இடிந்து விழுந்து...

வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து 2 பேர் உயிரிழப்பு

பேருந்து மோதியதில், சென்னை வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நள்ளிரவில் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு ஓய்வாக...