​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று அதிக அளவில் தேசியக் கொடியேற்ற பாஜக திட்டம்

சுதந்திர தினத்தன்று ஜம்மு காஷ்மீரில் அதிக அளவில் தேசியக் கொடிகளை ஏற்ற திட்டமிட்டுள்ள அம்மாநில பாஜகவினர், அதற்காக கட்சி தொண்டர்களுக்கு சுமார் 50 ஆயிரம் தேசியக் கொடிகளை விநியோகிக்கவும் முடிவு செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள்...

ஜேஏசி அமைப்பினரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி எரியும் தீப்பந்தங்களுடன் பேரணி..!

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் கைது செய்யப்பட்ட ஜேஏசி அமைப்பினரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கைகளில் எரியும் தீப்பந்தங்களுடன் கலந்துக் கொண்டனர்.முதலமைச்சர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அவர்களின் பேரணியை தடுத்த போலீசார் தடியடி...

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மழைக்காலம் துவங்க இருப்பதால் நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை குடிநீர் வாரியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து...

சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் வந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் பேச்சு

சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல்  தற்போது வந்துள்ளதாகவும் இப்பொழுது தான் கலைஞர், அண்ணா நமக்கு தேவை படுகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது....

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு...

வீட்டுக் காவலில் முன்னாள் முதல்வர்கள்...

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் சத்யபால் மாலிக் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது....

ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராடியவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி கலைத்தனர். ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவை முற்றிலும் கைவிட வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் தொடங்கி வார இறுதி நாட்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசுக்கு...

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஏராளமானோர் பேரணி

நெதர்லாந்தில் எல்ஜிபிடி (LGPT) என அழைக்கப்படும் ஓரினச்சேர்கை ஆதரவாளர்கள் கால்வாயில் பேரணி நடத்தி விழாவாகக் கொண்டாடினர். ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட படகுகளில் ஊர்வலமாகச் சென்றவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கொடிகள் மற்றும் பலூன்களைப் பிடித்தவாறு சென்றனர். அவர்களுடன்...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற, சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பள்ளி கல்லூரி, மாணவர்கள் பங்கேற்ற, சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  மதுரையில் மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி, அரசு விருந்தினர்...

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

சென்னை, பெசன்ட்நகர் கடற்கரையில் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னை பெருநகர காவல் துறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு...