​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மடிந்த

மும்பையின் ஜூஹூ கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின், நூற்றுக்கணக்கான மீன்கள், ஆமைகள், நண்டுகள்,  நீர்ப்பாம்புகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் பூசப்பட்ட ரசாயன வண்ணங்கள், பல லட்சம் பக்தர்கள் பேரணியாக வந்த போது பயன்படுத்திய...

தூண்டில் வளைவு அமைத்து தர கோரி 2வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி, தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டுமென, ஏராளமான மீனவக் குடும்பங்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப் பகுதி 10 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச்...

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல்

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதோடு அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. மித்னாபூரில் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.க.வினர் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச்...

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது

சென்னையில் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார். அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சிவமூர்த்தி, விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் பாயிண்ட் மேனாக பணியாற்றி வந்தார். இவர் சென்னையிலிருந்து பேரணி ரயில் நிலையத்துக்கு ரயிலில்...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்குப் பின் சுண்டைக்காய் கட்சிகள் காணாமல் போய் விடும் - திண்டுக்கல் சீனிவாசன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்குப் பின் சுண்டைக்காய் கட்சிகள் காணாமல் போய் விடும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் சாதனை விளக்க மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணியும், கே.டி.ராஜேந்திரபாலாஜியும் மிதிவண்டி ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தனர்....

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னையில் பேரணி

காலவரன்முறை ஊதிய உயர்வை அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர். சென்னை கலைவாணர் அரங்கம் முன்பாக துவங்கிய இந்த பேரணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பங்கேற்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை வந்த பேரணி போலீசார்...

பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன,போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இயங்கியதால் இயல்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள்,...

தனியார் பேருந்துக் கல்லூரியின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பொம்மையார் பாளையத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேங்காய் திட்டில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு...

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி...

அமைதிப் பேரணியில் மு.க.அழகிரி ஆயிரக் கணக்கான தொண்டர்களை திரட்டினார் - செல்லூர் ராஜூ

மு.க.அழகிரி பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்களை திரட்டி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் வாக்காளர்கள் சேர்ப்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், இளைஞர்களை அதிக அளவு ஈர்க்கும் கட்சியாக அதிமுக தற்போதும்...