​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

ராணுவத்தில் பெண்கள்..!

ராணுவத்தில் பெண்களுக்கு நீண்டகால பணியமர்வு அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்ததுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ((MM Naravane)) தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், ராணுவத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு...

8,888 பேரை தேர்வு செய்வதற்கான சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறுவது கேலிக்கூத்தாக இருப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட...

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த சர்ச்சை கருத்து

பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது கேவலமான விஷயம் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை தியாகராய நகரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மகளிருக்கான சுயபாதுகாப்பு குறித்த கருத்தரங்கில், பாஜக மாநில...

பெண்களை அச்சுறுத்திய டிக்டாக் நடன புயல் இளைஞர்

பெண்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வரம்பு மீறி பொது இடங்களில் நடன புயலாக நினைத்து ஆட்டம் போட்டு டிக் டாக்கில் பதிவேற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற...

ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவிகள் கின்னஸ் சாதனை..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ஆக்ராவில் பிங்க் பெல்ட் எனும் மகளிர் அமைப்பின் சார்பில் 7401 மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு பயிற்சி செய்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். பிரபல தற்காப்பு பயிற்சியாளர்...

ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களுடன் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை

டெல்லியின் ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் உள்ளிட்டோரிடம் மத்தியஸ்தர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த குழு 2 மாதங்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்...

ஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து மினி சுற்றுலா வேன் மீது மோதிய விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, சின்னநடுப்பட்டியில் உள்ள சேலம்...

பறக்கும் விமானத்தில் கதவைத் திறக்க முயன்ற பயணிகள்

பறக்கும் விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற சில பயணிகளால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 110 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஜெட்டா நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற 5 பயணிகள்...

சிஏஏவுக்கு எதிராக பேரணி... 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு...

சென்னையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலைவாணர் அரங்கு அருகே காலை 10 மணியளவில் தொடங்கிய பேரணி விருந்தினர்...