​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை, ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள்...

பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை நினைவு...

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த சர்ச்சை கருத்து

பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது கேவலமான விஷயம் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை தியாகராய நகரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மகளிருக்கான சுயபாதுகாப்பு குறித்த கருத்தரங்கில், பாஜக மாநில...

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

குழந்தைகள் விற்பனை: 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  திருவெறும்பூரைச் சேர்ந்த கோவிந்தன் - அஸ்வினி தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்...

2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி ?

சேலம் மாவட்டம் மூலசெங்கோட்டில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார். திவ்யா என்ற அந்தப் பெண்ணின் வீட்டருகே உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று திவ்யாவை மீட்டு...

சுட்டுகொல்லப்பட்ட குற்றவாளியின், 1 வயது பெண்குழந்தையை தத்தெடுத்த காவல்துறை அதிகாரி

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டவனின் ஒரு வயது பெண்குழந்தையை காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தத்தெடுக்க உள்ளார். பரூக்காபாத் மாவட்டத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்துக் கொண்டு தலா ஒரு...

300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரைந்த ராட்சத கோலம்

சேலத்தில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ராட்சத கோலத்தை 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரைந்தனர். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள 10 மாவட்டங்களில் மத்திய அரசால் நேரடி நிதி உதவியுடன் பெண்குழந்தைகளை காப்போம் மற்றும்...

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகம் - அமைச்சர்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பிங் நிற உடை...

தவறான தொடர்புக்கு இடையூறு.. பெற்ற குழந்தையைக் கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை..!

பெரம்பலூரில் பேராசிரியர் ஒருவர் வேறொரு பெண்ணுடனான தனது தொடர்புக்கு தொல்லையாக இருந்த மனைவியையும் ஒரு வயது மகளையும் கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர்கள் சரவணன்,...