​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற கேரள போலீசார் உத்தரவு

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு, கேரள போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பெண்கள் பலர் கோவிலுக்கு செல்ல முயன்று...

வரதட்சணை கேட்டு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், ஆயுதப்படைக் காவலர் விக்னேஷ் கைது

வரதட்சணை கேட்டு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சென்னை ஆயுதப்படைக் காவலர் விக்னேசையும், அவர் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விக்னேஷ் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் லட்சுமி என்கிற பெண்ணுக்கும் திருமணமாகி...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பஞ்சரி மேளம் எனப்படும் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, சன்னிதானம் செல்ல முயன்ற 4 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இன்று ஒரே நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வசந்தி, ஆதிசேசி ஆகியோர் வந்தபோது பம்பையிலேயே...

இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு இருமடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு இருமடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943ஆம் ஆண்டு சுதந்திர இந்திய அரசை அறிவித்ததன், 75ஆம் ஆண்டு நிறைவு விழா டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. இதில்...

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். மதுரை, பசுமலை அருகே பைகாரா பகுதியைச் சேர்ந்தவர் கமல் கருப்பையா. இவர் மீது சுப்பிரமணியபுரம், கரிமேடு, ஜெய்ஹிந்த் புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில்...

சேலம் அரசு மருத்துவமனையில் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று பெண்கள் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மாவட்டம் முழுவதும்  டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறை எடுத்த தீவிர முயற்சிகளால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது...

கோவை அருகே உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை

கோவை அருகே உணவு தேடி வந்த காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அரிசியை உட்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் மாங்கரை,தடாகம், தாளியூர் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தடாகம் அடுத்த தாளியூர்...

ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரைப் பக்தர்கள் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். மற்றொரு பெண்ணை சிலர் தாக்கியதில் காயமடைந்ததாக புகார் எழுந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வசந்தி,...

ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்பதற்கேற்ப பெண்கள் உறுதியுடன் இருந்தால் எந்த தவறும் நேராது - பிரேமலதா விஜயகாந்த்

ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்பதற்கேற்ப பெண்கள் உறுதியுடன் இருந்தால் எந்த தவறும் நேராது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பிரேமலதா கலந்து...

சபரிமலைக்குச் செல்ல முயன்ற 2 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற பெண்கள் இருவரைப் பக்தர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தினர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்துச் சபரிமலைக்குச் செல்வதற்காகப் பெண்கள் அமைப்பினர் பலரும் நாள்தோறும் முயன்று வருகின்றனர். பக்தர்களின்...