​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திண்டுக்கல்லில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் நெதர்லாந்து மிளகாய்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி... நோய் தாக்குதல், உரங்களின் விலையேற்றம்,...

இயற்கை முறையில் விவசாயம்... அசத்தும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அருகே மண்வளத்தைக் காக்கும் வகையில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார்.   திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் தலைமை ஆசிரியராக...

ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் - அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓய்வு நேரத்தில் தமது நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதோடு, இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.  புதுச்சேரி அருகேயுள்ள பூரணாங்குப்பத்தில் சுற்றிலும் பசுமை போர்த்திய நிலையில், சிலு சிலுவென வரவேற்கிறது...

பிரான்ஸ் நாட்டின் டூல்ஹவுஸ் நகர வீதிகளில் நடமாடிய ராட்சத இயந்திர சிலந்தி

ராட்சத இயந்திர சிலந்தி ஒன்று பிரான்ஸ் நாட்டின் டூல்ஹவுஸ் நகர வீதிகளில் நடமாடியது. இதனை பொதுமக்கள் கண்டு வியப்பு அடைந்தனர். இங்கு நடைபெறும் இயந்திர கண்காட்சிக்கு இந்த சிலந்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று வேறு சில பூச்சிகளும் இயந்திர வடிவில் வீதிகளில் நடமாடின. 43...

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர்  மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய...

டெங்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான 2 நாள் கருத்தரங்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை எழும்பூரில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது. எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அனைத்து மாவட்டபொது சுகாதார துணை இயக்குநர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள்,...

நீலகிரியில் வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வண்ணத்துப் பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் அரிய வகை தவளை இனங்கள், வண்டுகள், வண்ணத்துப் பூச்சி இனங்கள் உள்ளன. வன உயிரின வார விழாவை முன்னிட்டு, சுமார் 30...

கிண்டி ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்துக்கு சீல் - உரிமம் ரத்து

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்துக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.  சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் 50 தொழிலாளார்களுடன் செயல்பட்டு வந்த இந்த உணவுக் கூடத்தில் இருந்து...

ஜெய்ப்பூர் அருகே ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே வேளாண் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட காட்புட்லி (Kotputli) நகரில் உள்ள கேஷ்வானா (Keshwana) தொழிற்பூங்காவில் விவசாயத்துக்கு உதவும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்தத்...

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிக்க பரிசீலனை - ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற 30-ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற...