​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆய்வு தள்ளிவைப்பு

புயல் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செல்வதாக இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின் அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  சேலம் மாவட்டம் வனவாசியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் கரையை...

புயல் பாதித்த பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், துரித கதியில் நடைபெற்று வருகின்றன - ஏடிஜிபி ரவி

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட புயல் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், துரித கதியில் பணிகளை செய்து வருவதாக மாநில பேரிடர் மீட்பு அதிவிரைவுப்படை ஏடிஜிபி ரவி கூறினார். தஞ்சை கீழவாசல் பகுதியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சார்பில்...

புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வனவாசியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். புயல் அடித்து முடிந்த உடனேயே பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், இவ்வளவு...

ஆயிரக்கணக்கில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்... மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

கஜா புயலால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்...

புயல் பாதித்த பகுதிகளுக்கு விரைவில் செல்ல இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் சேதங்களை பார்வையிட விரைவில் தாம் செல்லவிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகக் கூறினார். அப்பகுதிகளை...

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஊர்களிலும் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்தும் சேதம்

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஊர்களிலும் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதே போல காரைக்காலிலும் புயல் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கரம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட ஊர்கள் கஜா புயலால்...

கஜா புயல் பாதித்த பகுதிகளில் சேதங்களை பார்வையிட செல்லவுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

கஜா புயல் பாதித்த பகுதிகளில் சேதங்களை பார்வையிட செல்லவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப்...

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின்கட்டமைப்புகளைச் சீரமைத்து இரண்டு நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. கஜா புயல் கரையைக் கடந்தபோது வீசிய பலத்த காற்றால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை...

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய யுட்டு புயலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும் புயல் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. யுட்டு ((Yutu)) என்று பெயரிடப்பட்ட புயல் நேற்று பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாக்கியது. மணிக்கு 152 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால், பெருமழையும் கொட்டித் தீர்த்தது....

ஒடிசாவில் "டிட்லி" புயல் பாதித்த பகுதிகளில், கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம்

ஒடிசாவில் "டிட்லி" புயல் பாதித்த பகுதிகளில், கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டிட்லி புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், கஞ்சாம், ராயஃகடா, கஜபதி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. புயல் மற்றும் மழை வெள்ளத்திற்கு 20 பேர் வரை...