​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிவசேனாவுடன் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி

மகாராஷ்டிராவில் சிவசேனா,காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வாரத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரசேத காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு தெரிவித்தார்....

முதலமைச்சர் நாராயணசாமி மீது, மத்திய அரசிடம் கிரண்பேடி புகார்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உரிய அனுமதிபெறாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூர் சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அம்மாநில துணை...

சிங்கப்பூரில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசுமுறைப் பயணம்

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழிலதிபர்கள் பலரை...

‘பேய்’ என தன்னை முதலமைச்சர் விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆளுநர் கிரண்பேடி

தன்னை ‘பேய்’ என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி...

புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

குழந்தை சுஜித்தின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் குரல் எனும் குறைதீர்ப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது....

புதுச்சேரியில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

புதுச்சேரியில், ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருந்தால், அவற்றை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்,...

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் என புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை - கிரண்பேடி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி...

சீமான் மீது வழக்கு பதிவு..!

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில்  2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்...

வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அந்தந்தக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரி  நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கே.டி.சி.நகரில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக தமிழக...

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம்...