​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரம்ப் இந்தியா வருவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில்,செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த...

தலித்துகளுக்கு எதிரான கொடுமை தடுப்புச் சட்டம் மீண்டும் கடுமையாகிறது - நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டம் மீண்டும் கடுமையாகிறது. இச்சட்டத்தைத் திருத்தி நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிற்படுத்தப்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொடர்பான சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சியினருக்கு மோடி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிகளால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  2014 முதல் 17 வரையிலான காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பிகளுக்கு கௌரவமளிக்கும் விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில்...

இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு அமீர் கான், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு இந்தி நடிகர் அமீர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி தலைமையில் கூட்டணி...

பாக். பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என பி.டி.ஐ. கட்சி மறுப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் வரும் 11ஆம் தேதி பதவியேற்கிறார். இதில் பங்கேற்குமாறு பிரதமர்...

ஈரானில் சிக்கித் தவித்த 21 மீனவர்கள் மீட்பு... இரண்டே நாட்களில் நாடு திரும்புவார்கள் என சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஈரான் நாட்டில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 3-ம் தேதி முதல் குழுக்களாக சென்னை வந்து சேர்வார்கள் எனவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள்...

இணையத்தை கலக்கும் கிகி சவால்..! காவல்துறை கடும் எச்சரிக்கை

கிகி நடன சவால்...... இது தான் இப்போது உலகம் முழுவதும் இணையவாசிகளை அதிகம் ஈர்த்துள்ள சங்கதி. கனடா நாட்டின் பாடகர், பாடலாசிரியர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை வெளியிட்டார். இந்த...

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிறிய...

சுதந்திர தின உரை பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் யோசனை கேட்கிறார் பிரதமர் மோடி

சுதந்திர தின உரையில் எதுகுறித்தெல்லாம் பேசலாம் என பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் யோசனை கேட்டுள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தாம் உரை நிகழ்த்த உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரை தொடர்பான...

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி - பிரதமருக்கு மாலை அணிவித்து வாழ்த்து

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்றதற்காக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர்...