​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், தாய் மரணமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோட்டப்பட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி...

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களின் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம், ஆறாவது நாளை எட்டியுள்ளது.  தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச...

புத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..!

கேரள மாநிலம் இடுக்கியில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவி ஒருவர், தனக்குப் பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தகப் பையில் மறைத்து வைத்து சுற்றித் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் வாத்திகுடி என்ற ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரியில்...

108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. செய்யார் அடுத்த தொழுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி மஞ்சுளா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவவலி ஏற்பட்டு நாவல்பாக்கம் அரசு ஆரம்ப...

நிறைமாத கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸிலேயே அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி கிருத்திகாவிற்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ்...

மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடந்த பெண் சிசு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அரசுமருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் இன்று காலையில் கழிவறையை சுத்தம் செய்ய பெண் துப்புரவு தொழிலாளி...

38 வயதில் 20வது முறையாக கர்ப்பம் தரித்துள்ள பெண்

மகராஷ்டிர மாநிலத்தில் 38 வயது பெண் ஒருவர் 20 வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளது மருத்துவர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. பீட் மாவட்டத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற பெண் 38 வயதிற்குள் 16 குழந்தைகளை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....

மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 117 நாட்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை

செக் குடியரசு நாட்டில், 15 வார கர்ப்பமாக இருந்தபோது மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவருக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையின் உதவியால் 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 15 வார...

உரிய நேரத்தில் கர்பிணி பெண்ணை காத்த காவலருக்கு குவியும் பாராட்டு

சென்னை நம்மாழ்வார்பேட்டையில் பிரசவ வலியிலும் உதவிக்கு எவரும் இன்றியும் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று காத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் காவலர்கள், செல்வராஜ், ராஜசேகர் ஆகியோர்...

கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்தது. தெற்கு லண்டனில் இருக்கும் க்ராய்டன் பகுதியில் 8 மாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு லண்டன் நகர போலீசார் மற்றும்...