​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சரத்பவாரின் டெல்லி பேட்டியால் சிவசேனாவில் கடும் குழப்பம்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லியில் சோனியா உடனான சந்திப்பில், அரசியல் பேசவில்லை எனக் கூறியதால், சிவசேனா தரப்பு கடும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சரத்பவாரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா...

ஆட்சியமைக்க சிவசேனாவுடன் பேச்சுவார்த்தையா? சரத்பவார் பதில்

ஆட்சியமைப்பது குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தையா என்ற கேள்விக்கு பிடிகொடுக்காமல் சரத்பவார் பதிலளித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச உள்ளார். இதில், சிவசேனாவுடன் சேர்ந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக...

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், எதிர்க்கட்சி வரிசையில் அமர சிவசேனா எம்.பி.க்கள் முடிவு?

பாஜக- சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரிசையில் அமர சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர்கள், முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் உடன்பாடு எட்டப்படாததால் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், வரும் திங்கள் கிழமை தொடங்கும் குளிர்கால கூட்டத்...

2 நாள் அவகாசம் கோரிய சிவசேனா.. மராட்டிய ஆளுநர் ஏற்க மறுப்பு..!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்துள்ள சிவசேனா, பெரும்பான்மை ஆதரவு கடிதங்களை அளிப்பதற்கு, 2 நாள் அவகாசம் கோரியதை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். எனவே அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஆட்சி அமைக்க சிவசேனா தனது முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவசேனாவை ஆதரிப்பதில், குழப்பமான மனநிலையிலேயே...

பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடுத்த திருப்பம்

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி முறியும் நிலையில், சிவசேனா எம்.பி. அரவிந்த சாவந்த் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் வேறுபாடுகளை மறந்து, மகாராஷ்டிரத்தின் நலனுக்காக குறைந்தபட்ச செயல் திட்டத்திற்கு வரவேண்டும் என்றும் சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. 288 உறுப்பினர்களை...

ஆட்சியமைக்க இயலாது : பாஜக.... சிவசேனா கனவு பலிக்குமா?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மகாராஷ்டிரா தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை விட, கூடுதலாக 16...

மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் ராஜினாமா..! சிவசேனாவுக்கு நிதின் கட்கரி கெடு

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது ராஜினா கடிதத்தையும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். இந்த சந்திப்பு, சுமார் 20...

மராட்டிய அரசியலில் உச்ச பரபரப்பு.. திக்..திக்.. நிமிடங்களுடன் நகர்வுகள்

ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய இன்னும் 24 மணி நேரமே எஞ்சியிருப்பதால், மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. சிவசேனாவை அமைதிப்படுத்த, உத்தவ் தாக்ரேவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், அதனை அவர் மறுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிராவின்...

முதலமைச்சர் பதவி..! சிவசேனா பிடிவாதம்

முதலமைச்சர் பதவி தொடர்பான கோரிக்கையில் இருந்து சிவசேனா பின்வாங்காது என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.  மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும், முதலமைச்சர் பதவியை சிவசேனா கோருவதால் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் இருகட்சிகளிடையே...

சிவசேனாவின் ஆதரவு பெறப்படும் - நிதின் கட்கரி

மராட்டியத்தில் புதிய அரசு அமைக்க சிவசேனாவின் ஆதரவு பெறப்படும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து பல நாள்கள் ஆகியும், பாஜக-சிவசேனா இடையே முதலமைச்சர் பதவி தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததால்...