​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூரில் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி அருகே சிறுத்தைகள் நடமாட்டம்...

குன்னூரில் சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். வெலிங்டன் அருகேயுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. கடந்த 25ஆம் தேதி...

பள்ளி கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிப்பு

பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், அதனால் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள...

உலக நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - மக்கள் பீதி

தென் கொரியாவில் மேலும் 169 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியாவே உள்ளது. இந்நிலையில் புதிய ஆய்வின்படி, அங்கு ஒட்டு மொத்தமாக அமெரிக்க ராணுவ வீரர் உள்பட1146 பேருக்கு...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 27 பேர் கைது

ஆந்திர மாநிலம் கடப்பாவில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் உள்பட 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். நாகசாமி பள்ளி வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக வந்த தகவலின் பேரில்,அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், செம்மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததாக,...

டெல்லியில் சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மோதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லியில் வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதியின் பல இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது....

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு 5 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2012ம்...

டெல்லி அரசுப் பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய மெலனியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா டெல்லியிலுள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். நானாக்புரா பகுதியிலுள்ள சர்வோதயா மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற மெலானியாவுக்கு, பாரம்பரிய உடையணிந்த பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் திலகமிட்டும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மழலையர் வகுப்பை...

டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்களிடையே மோதல் - 7 பேர் பலி

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ சட்ட எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே நேரிட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலவும் பதற்றத்தால் வடகிழக்கு டெல்லியின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  குடியுரிமை...

நித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி…! கண்களை கட்டி கலக்கும் மாணவி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பள்ளி மாணவி ஒருவர் ரப்பர் துணியால் கண்களை கட்டிக் கொண்டு கண்கள் திறந்திருப்பது போல அனைத்துப் பொருட்களையும் அடையாளப்படுத்துகிறார். நித்தியின் சக்தி என்று அளந்துவிட்ட சிஷ்யைகளுக்கு டஃப் கொடுக்கும் நம்ம ஊர் மாணவியின் அசாத்திய திறமை குறித்து...

ஈரானில் 50 பேர் கொரானாவுக்கு பலி

ஈரானில், ஷியாக்களின் முக்கிய மதக் கல்வி நகரமாக விளங்கும் குவோம் (Qom) நகரில், இந்த மாதம் மட்டும் ,50 பேர் கொரானா தொற்றுக்கு உயிரிழந்து விட்டதாக, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ILNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 13 ஆம் தேதி...