​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பனி மழை

காஷ்மீரில் பெய்யும் பனிமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் பல நகரங்களில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. விட்டு விட்டு தொடர்ந்து பனிப்பொழிவு நிலவியது. இதனால் ஸ்ரீநகரில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.பனிப்பொழிவு காரணமாக...

ஜெர்மனியில் கொட்டித் தீர்க்கும் பனி மழை

ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பவாரியா மாநிலத்தில் உள்ள பெர்ச்டெஸ்கடன் ((Berchtesgaden)) நகரில், பனிமழை கொட்டுகிறது. காணும் இடம் எல்லாம் பனி மலை போல் காட்சி அளிக்கிறது. நகரமே...

புல்வெளியில் படர்ந்த பனி மழை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காரணமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அக்டோபர் மாதத்தில் தொடங்க வேண்டிய குளிர் காலம், தாமதமாக ஜனவரி மாதம் தொடங்கி உள்ளது. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உதகை...

காஷ்மீரில் பொழிந்து தள்ளுகிறது பனி

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரை பனிப்பொழிவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது. வழக்கத்தை விட அதிகமாக பெய்து தள்ளும் பனியே இதற்கு காரணமாகி உள்ளது. காணும் இடம் எங்கும் குவிந்து கிடக்கும் பனி, அதன் பொழிவுக்கு சாட்சியாகி உள்ளது. தொடரும் பனி மழையால் காஷ்மீர் பள்ளத்தாக்கு திக்குமுக்காடிப்...

அமெரிக்காவை வாட்டுகிறது கடும் குளிர்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களை குளிர் காலம் வாட்டி எடுக்கிறது. அந்த மாகாணங்களில் இடைவிடாது பொழியும் பனி மழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி குவிந்து கிடப்பதால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே போல வானிலையில்...

ரஷ்யா பாதுகாப்பு படை வீரர்களின் திடீர் கச்சேரி

ரஷ்யா தேசிய பாதுகாப்பு படையினரின் கிறிஸ்துமஸ் கச்சேரி காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்நாட்டு அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த படை வீரர்கள், இசைக்குழு சீருடையில், மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் கூடி, கிறிஸ்துமஸ் பாடலை பாடினர். இசை கருவிகள் ஏதுமின்றி, அவர்கள் பாடலை பாட,...

ரஷ்யாவில் அதிகரிக்கிறது பனியின் ஆதிக்கம்

குளிருக்கு பெயர் போன ரஷ்யாவும் கூட இப்போது கடுங் குளிரால் நடுங்குகிறது. அந்நாட்டின் சைபீரியா எப்போதும் பனிக்குள் ஆழ்ந்திருக்கும் நிலப்பரப்புகளில் ஒன்று. குளிர்காலம் உச்சிக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தில் சைபீரிய பிராந்திய நகரங்களை பனிமழை தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பெய்து தீர்க்கும் பனி...

சீனாவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்க்கும் உறைபனி மழை

சீனாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பனிமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஸிபென்ங் ((city of Chifeng)) நகரிலும், மங்கோலியாவின் உள்புறப் பகுதிகளிலும் கடுமையான பனி மழை பெய்து வருகிறது. விழும் பனித்துகள்கள் கிட்டத்தட்ட 5 மில்லி...