​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது - சத்யபால் மாலிக்

நாட்டில் ஆளுநர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாசி மாவட்டம் (Reasi) கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணதேவி பல்கலைக்கழகத்தில் 7ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய சத்யபால் மாலிக், பத்திரிகையாளர் சந்திப்பை கூட...

முதல் பக்க செய்தியை மை பூசி மறைத்து வெளியிட்ட பத்திரிகை நிறுவனங்கள்

பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தித்தாள்கள் அனைத்தும் தங்களது முதல் பக்க செய்தியை கருப்பு நிற மை பூசி மறைத்து வெளியிட்டன.  போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவுப்பார்த்த அரசு நிறுவனம்’ என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு...

வெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்

குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை...

ஹாங்காக்கில் நடைபெற்ற வன்முறை குறித்து சுதந்திரமான விசாரணை

ஹாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிஷெல் பேச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஹாங்காக்கில் அரசுக்கு எதிராக 4 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டோர்...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அந்நாட்டின் முன்னணி பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சார்லோட் எட்வர்ட்ஸ். இவர் கடந்த 1999ம் ஆண்டு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய போரிஸ் ஜான்சன், விருந்து நிகழ்ச்சி...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்

பாஜகவின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரியை விமர்சித்ததற்காக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தில் கொண்டு வந்ததை போலவே தலைநகர் டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவர வேண்டும் என டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான...

மாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு..! ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனாவுடன் சுமூகமான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த...

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க குழு - அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடுவின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது....

கொலை-கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த போலி பத்திரிகையாளர்

தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை-கொள்ளைகளில் ஈடுபட்ட நபரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் போலீசார் கைது செய்துள்ளளனர். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்கு பிரஸ் ஸ்டிக்கருடன் திருட்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலைய எல்லைக்கு...

அரசுப்பள்ளியில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்ட விவகாரம்

உத்தர பிரதேசத்தில் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்டதை படம்பிடித்த செய்தியாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதனை கண்டித்து சக பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூரிலுள்ள அரசுப்பள்ளி ஒன்றில், மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்...