​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரியல் எஸ்டேட் அதிபர்.. வெட்டிச் சாய்த்த கும்பல்..!

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சேவல் சண்டை தகராறில் கொலை நடந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை கே.புதூர் ராமவர்மநகரைச் சேர்ந்தவர்...

போலீசில் பிடித்துக் கொடுத்தவரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரி...

காஞ்சிபுரம் அருகே பொதுமக்களால் போலீசில் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா வியாபாரி, 3 மாதம் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்து, தன்னை பிடித்துக் கொடுத்தவர்களை பழிதீர்க்கும் வகையில் பொதுமக்கள் சிலரை அரிவாளால் வெட்டியதில் ஒருவர் பலியானார். மேலும் பலத்த வெட்டுக்காயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில்...

உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள...

மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்

கும்பகோணத்தில் மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி சாவகாசமாக ரவுடிகள் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. கும்பகோணம்- தஞ்சை சாலையில் பழைய டைமண்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த 2ந்...

மாநகரப் பேருந்தில் மாணவர்கள் மோதிய சம்பவத்தில் ஒரு மாணவருக்கு ஜாமின்..!

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர், சம்பவத்தன்று அந்த இடத்திலேயே இல்லை என்பதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி...

வன்முறை மாணவர்கள் மீது குண்டாஸ் - காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அது போன்று தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப் பேருந்துக்குள்...

பட்டமா? பட்டாக்கத்தியா? தடம் மாறும் மாணவர்கள்...!

சென்னையில் ஓடும் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினர் மோதிக் கொண்டதும், சாலையில் இறங்கி ஓடிய மாணவனை சக மாணவர்கள் பட்டாக்கத்தியால் ஓட ஓட வெட்டியதும் பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது.  பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில்...

ரூட்டு தல பிரச்சனை தொடர்பாக கல்லூரி மாணவர்களுகிடையே பட்டாக் கத்திகளுடன் மோதல்

சென்னை அரும்பாக்கத்தில், மாநகரப் பேருந்தில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன்  மோதிக் கொண்டதால், பதற்றம் நிலவியது.  பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து...

துணிக் கடைக்குள் புகுந்த இருவர், உரிமையாளரை பட்டாக் கத்தியால் வெட்டிய சம்பவம்

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், துணிக்கடை உரிமையாளரை இருவர் பட்டாக் கத்தியால் வெட்டும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நங்கவள்ளியைச் சேர்ந்த வேலு தங்கமணி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக உள்ளார். அதே ஊரில் துணிக் கடையும் நடத்தி வருகிறார். இந்த...

மசாஜ் பார்லரில் கத்தியை காட்டிய கைகளுக்கு மாவுகட்டு..!

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் பார்லர்களுக்குள் புகுந்து, மசாஜ் செய்யும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் மற்றும் நகை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மசாஜ் பார்லரை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பி ஓடிய 3 கொள்ளையர்களின் கைகளில் மாவுகட்டுப்...