​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொருளாதாரத்தை பங்குச்சந்தை விளையாட்டாக கருதுகிறதா மத்திய அரசு? - சிவசேனா கேள்வி

நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க மத்திய அரசு மறுப்பதாக சிவ சேனா குற்றம்சாட்டி உள்ளது. சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் இந்திய பொருளாதாரத்தை,...

ஜாக்குவார் லேண்ட் ரோவர் மொத்த விற்பனை 3.4 சதவீதம் சரிவு

சொகுசு கார்களை தயாரிக்கும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன விற்பனை 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான அந்த நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் தாக்கல் செய்த...

லண்டனில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ்.பொறுப்பேற்பு

லண்டனில் கத்தியால் குத்தி தீவிரவாதி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. லண்டன் பாலத்தின் மீது நடந்து சென்றவர்களை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் காயப்படுத்திய 28 வயதான ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொல்லப்பட்டவனின் பெயர் உஸ்மான் என்றும் போலீசார்...

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு..

இந்தியாவின் ஜிடிபி டேட்டா வெளியாவதற்கு முன்பே, அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை சரிவடைந்தது. இறுதியில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரத்து 793 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை...

ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தின்போது, அந்நிறுவன பங்குகளின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஆயிரத்து 581 ரூபாயாக உயர்ந்தது. இதன்...

பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் நிறைவடைந்திருக்கிறது. இதேபோல், முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், புதிய உச்சத்துடன், இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. 41,002 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தை தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும், பெரியளவில் மாறுபாடின்றி 41,000 புள்ளிகளுக்கு குறையாமல், வர்த்தகத்தை தொடர்கிறது. நேற்று 41,064 புள்ளிகளுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த நிலையில், இன்று காலையிலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு..!!

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிற்பகலில் சரிவுடன் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 120 புள்ளிகளை எட்டியது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக இது பார்க்கப்படுகிறது....

ரிலையன்ஸ் நேவல் நிறுவன பங்குகளின் மதிப்பு செப்.9-க்குப் பிறகு 600 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்

அனில் அம்பானியின் திவாலாகும் நிலையில் உள்ள "ரிலையன்ஸ் நேவல் அண்டு எஞ்சினியரிங்" ((Reliance Naval and Engineering)) நிறுவன பங்குகளின் மதிப்பு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு 600 சதவீதம் அளவு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 95 பைசா என்ற அளவுக்கு...

பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று, தனது வரலாற்றில், 41 ஆயிரம் புள்ளிகளை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது. நேற்று மாலை, சென்செக்ஸ் 40 ஆயிரத்து 916 புள்ளிகள், என்ற நல்ல உயர்வுடன், வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை, மும்பை...