​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிவசேனாவுடன் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி

மகாராஷ்டிராவில் சிவசேனா,காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வாரத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரசேத காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு தெரிவித்தார்....

கஞ்சா மற்றும் ரவுடிகளை ஒழிக்க தனித்தனி குழு - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் ரவுடிகளை ஒழிக்க தனித்தனியே குழுக்கள் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை பகுதிகளில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரவுடிகள் 2 பேர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு...

முதலமைச்சர் நாராயணசாமி மீது, மத்திய அரசிடம் கிரண்பேடி புகார்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உரிய அனுமதிபெறாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூர் சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அம்மாநில துணை...

சிங்கப்பூரில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசுமுறைப் பயணம்

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழிலதிபர்கள் பலரை...

காது கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு இலவச பயிற்சி

சென்னை அடையாறு சாஸ்திரிநகரில் செயல்படும், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பள்ளியை லட்சுமி நாராயணசாமி என்பவர் 1969-ல் தொடங்கினார். பின்னர், அவரது நண்பருடன் இணைந்து இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளை ஆசிரியர்கள்,...

‘பேய்’ என தன்னை முதலமைச்சர் விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆளுநர் கிரண்பேடி

தன்னை ‘பேய்’ என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி...

விடுதலை நாளை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி விடுதலை கிடைத்ததை...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு...

புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

குழந்தை சுஜித்தின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் குரல் எனும் குறைதீர்ப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது....

புதுச்சேரியில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

புதுச்சேரியில், ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருந்தால், அவற்றை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்,...