​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சார வாரியத்தில் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை நடத்த எவ்வித தடையுமில்லை - அமைச்சர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை நடத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்...

சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தவன் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்பவன் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணிபுரிந்து வந்துள்ளான். அப்போது ஆபாச இணையதளங்களில் இருந்து...

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விளாங்காட்டூரில் உள்ள முருகனேஷ் என்பவருக்கு சொந்தமான நல்லாதாள் ஸ்பின்னிங் மில்லில் இன்று பிற்பகலில் திடீரென பற்றிய தீ...

சுயமரியாதைப்படி சுவீடன் நாட்டுப் பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ் இளைஞர், சுவீடன் நாட்டுப் பெண்ணை தாலி கட்டாமல், மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்தார். சாணார் பாளையத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் தரணி. இவர் சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் எம்எஸ் படித்த போது அந்நாட்டைச்சேர்ந்த இளம்பெண்...

கோடை காலத்தில் மின்சார தேவையை எளிதாக சமாளிக்க முடியும் - அமைச்சர் தங்கமணி

கோடை காலத்தில் மின்சார தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை எட்டினாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்றார். அப்போது ஏமப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள...

உரிய அனுமதியின்றி இயங்கி வந்த 50 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இப்பகுதிகளில் 60 சாயப்பட்டறைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல்...

குப்பை தொட்டி அருகே விட்டு செல்லப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியினால் மீட்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குப்பை தொட்டி அருகே விட்டு செல்லப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியினால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டியான லட்சுமி கணவர் மற்றும் 3 மகன்கள் இறந்த நிலையில்...

புகையான் நோய் தாக்கி கருகிய ஆந்திரா பொன்னி - விவசாயிகள் வேதனை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் ஆந்திரா வகை நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கி கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கல்லாங்காட்டு வலசு, உப்பு பாளையம் பகுதியில், ஐ.ஆர் 20, சம்பா, பொன்னி மற்றும் பிபிடி எனப்படும்...

அடங்க மறுத்த அமைச்சர்களின் காளைகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட காளைகள், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்புடன், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  காலை 8. 45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், சரோஜா...

“என் வீட்டைக் காணவில்லை”... அதிர்ச்சி தந்த விவசாயி...!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தனது வீட்டைக் காணவில்லை என விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன்.  குடிசை வீட்டில் வசித்து வரும் இவர்...