​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்ற முயல்கிறது - முதலமைச்சர்

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்ற முயல்கிறது என நாங்குனேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.  நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும்...

12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை...

நாங்குனேரி - காங்கிரசுக்கே! "ஓகே" சொன்னது திமுக

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்கிற சர்ச்சை எழுந்த நிலையில் காங்கிரசுக்கே அந்தத்தொகுதியை திமுக ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்...

விக்கிரவாண்டி, நாங்குநேரி - அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். அதனால் அந்த...

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு  நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு  தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன்...

திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி அணைகளிலிருந்து கார்ப்...