​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றடைந்துள்ளார். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 5 பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதாக, தலைநகர் டெல்லியிலிருந்து நேற்று...

பிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில்...

பிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்..

பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இரண்டு நாள் மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு,...

கர்த்தார்புர் புனிதத் தலத்திற்கு செல்லும் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்புர் சீக்கியர் புனிதத் தலத்திற்கு செல்வோருக்காக, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.  சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார்....

பாம்பனில் ரூ. 250 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய ரயில் பாலம்

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.  கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து...

பிரதமர் மோடி நவ.13,14 தேதிகளில் பிரேசிலில் சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உலகின் 42 சதவீத...

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை இந்தியா எட்டுவதற்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பும் முக்கியமானது..!

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பங்களிப்பும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான 2 நாள் நிகழ்ச்சி...

அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது - பிரதமர் மோடி

மனித சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியாவின் ஐந்தாவது சர்வதேச அறிவியல் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நவம்பர்...

மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..

தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாங்காக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு தாய்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இதேபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு உச்சி...