​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை, அந்தத் தேர்தல் செல்லாது - தமிழக அரசு

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை என்றும் அந்தத் தேர்தல் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்தலில் 80 சதவீதம்...

நீதிபதிக்கு நிர்பந்தம் - நடிகர் ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிபதியை நிர்பந்தம் செய்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நடிகர் ஐசரி கணேஷ், தனது வழக்கறிஞருடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மையத்திற்கு பாதுகாப்பு கேட்ட விஷாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கூடாது என்று ஐசரி...

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி துணை நடிகர்கள் மனு

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணை நடிகர்கள் பெஞ்சமின், சிங்காரவேலன், சிம்மராசு ஆகிய மூன்று பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சங்கத் தேர்தலில் தங்களை தபால் ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், தபால்...

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர்...

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லையா என்ற கேள்விக்கு சத்யராஜ் பதில்

நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், சென்னை சென்று நிச்சயமாக வாக்களிப்பேன் என்று தெரிவித்தார். கோவை சாய்பாபா காலனியில் தொடங்கப்பட்டுள்ள பாடி ஸீல் ஃபிட் ஒர்க் என்கிற உடற்பயிற்சி கூடத்தை நடிகர் சத்யராஜ்...

நாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் மும்முரம்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக வந்த புகாரால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில்,...

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்ததற்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த சென்னை மாவட்ட பதிவாளரின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சங்க உறுப்பினர்களாக இருந்த 61 பேர் தாங்கள் காரணமின்றி நீக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மாவட்டப் பதிவாளர் வரும் 23-ஆம் தேதி...

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணியும் ஆளுநரை சந்திக்கிறது...

நடிகர் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் நேற்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை...

நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்ட தேதியில் திட்டமிட்ட இடத்தில் நடைபெறாது - எஸ்.வி.சேகர்

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அன்றைய தினம் அங்கு தனது நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி,...

நடிகர் சங்கத் தேர்தல் - இடத்திற்கு அனுமதி மறுப்பு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத விதத்தில் மாற்று இடத்தை நாளை தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.  வரும் 23 ஆம் தேதி சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்...