​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்தோடு, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்,...

தவான், ரோகித் அதிரடி சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா... ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி அபாரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆசிய கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்...

10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ் மான் என்ற மிகப்பெரிய அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்...

10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல், ஜுனில் மட்டும் மறுதேர்வு

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டு முதல் ஜுனில் மட்டும் மறு தேர்வெழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9ஆம் வகுப்பு முதல்...

பத்து கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ராஞ்சியில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 40 கோடி பேர் பயன்அடைவார்கள். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு...

தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களாக 25 பேர் தேர்வு

தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 25 உறுப்பினர்கள் பதவிக்காக 192 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி...

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாணவி ராஜேஸ்வரி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான அவரது தேர்வு...

ககன்யான் திட்டத்துக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளம் அமைப்பு

விண்வெளிக்கு ஆளுள்ள விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காகப் புதிய ஏவுதளத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அமைத்து வருகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு முயன்று வருகிறது. இதற்காக ஆந்திர மாநிலம்...

Rafale ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ்சை கூட்டாளியாக தேர்வு செய்ததில் France, இந்திய அரசுகளுக்கு தொடர்பில்லை - டசால்ட் நிறுவனம் விளக்கம்

ரஃபேல் விமான தயாரிப்புக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில்  ஃபிரான்ஸ் அரசுக்கோ இந்திய அரசுக்கோ தொடர்பில்லை என டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது.  ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தொழிலதிபர் அனில்...

ஜடேஜா சுழல்... ரோகித் அதிரடி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி  வெற்றி பெற்றது.   ஆசியக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற...