​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.   ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்துவதற்கும், வாக்களிப்பதில் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என...

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்?

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. யூனியன் பிரதேசங்களாக பிரியும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அண்மையில்...

வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை -தேர்தல் ஆணையம்

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டை ஆதரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குச்சீட்டு முறையை...

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம்

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமை செயலகத்தில்...

தேனி மக்களவைத் தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையம், எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்....

வேலூர் தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது...

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த தை அடுத்து, வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அந்த தொகுதியில் 5 ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சிலவாரங்களாக பிரசாரத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர்...

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி...

சீமானின் ஆதங்கத்திற்கு தமிழிசை நன்றி

பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தனக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று ஆதங்கப்படும் சீமானின் அக்கறைக்கு நன்றி என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. வேலூரில் ஸ்டாலின் கூட்டம் நடத்திய...

ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரம்.. அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்..

வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமலேயே வசிக்கும் பகுதியில் இருந்தவாரே வாக்களிக்கும் வகையில் , ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கி சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.. இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகையினை கொண்ட ஜனநாயக நாடுகளில் ஒவ்வொரு முறையும்...

ஒப்புகைச் சீட்டு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 7 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம், குழுக்களை அமைத்துள்ளது. மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போது 1.25 கோடி...