​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மோதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லியில் வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதியின் பல இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது....

அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்யத்தக்க குற்றம் செய்யவில்லை - செனட் சபை

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக செனட் சபையில் நடைபெறும் விசாரணையில், சாட்சிகளை ஆஜர்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் நிராகரித்தனர். அமெரிக்க முன்னாள் துணை அதிபரான ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த...

இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி

இலங்கைக்கு ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவு மேம்பாடு, தேச பாதுகாப்பு,...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன் அஜித் தோவல் சந்திப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கை அதிபர், மிகுந்த இணக்கமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இருநாட்டு உறவை...

வளைகுடாவில் பதற்றத்தை தணிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும்

வளைகுடாப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜரிப் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவால் கொல்லப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு நாடுகளில்...

டெல்லியில் நாளை நடக்கும் புவி பொருளாதார உச்சி மாநாட்டில் 13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்பு

13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த மூன்று நாள் நிகழ்வில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் நடக்க...

இயல்புநிலை திரும்புவதால் காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி துணை ராணுவப் படை வாபஸ்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையைச் சேர்ந்த 7 ஆயிரம் வீரர்களை திரும்ப அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய...

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காணப்படும்

எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. டெல்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ தலைமையிலான குழுவினர் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அண்மையில் ஐநா.பாதுகாப்பு...

இந்தியா-சீனா இடையே எல்லைத் தகராறுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கான சிறப்பு பிரதிநிதிகளின் 21ஆவது கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 22ஆவது கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று...

இந்தியா -சீனா எல்லைப் பேச்சுவார்த்தையை தாஜ்மகால் அருகே நடத்த பரிசீலினை

இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ வரும் 21 ம் தேதி...