​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே கணியமூர் கைகாட்டி என்ற இடத்தில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த...

ஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து மினி சுற்றுலா வேன் மீது மோதிய விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, சின்னநடுப்பட்டியில் உள்ள சேலம்...

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...

சென்னை அருகே பயங்கர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு ஆந்திராவில் இருந்து ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சென்னை...

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மினி லாரிகள், கேஸ் டேங்கர் லாரி, 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலையில் விழுப்புரம் புறவழிச்சாலை வழியே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற...

பிப் 15 முதல் 29 வரை பாஸ்டாக் ஸ்டிக்கர்கள் இலவசம்

சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் நோக்கில், வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை வாங்கப்படும் பாஸ்டாக் ஸ்டிக்கர்களுக்கான விலை 100 ரூபாயை தள்ளுபடி செய்வதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வாகன உரிமையாளர்கள் அவற்றின்...

ECR,OMR சுங்கச்சாவடிகளிலும் இனி பாஸ்டாக் முறை

 இன்னும் இரண்டு மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக்(FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில், டிஜிட்டல் கட்டண முறையான பாஸ்டாக்,...

சேலத்தில் உலகத்தர கிரிக்கெட் மைதானம்.. தோனி விளையாடுகிறாரா..?

சேலம் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் வாழைப்படியில் உள்ள கருவேப்பிலை பட்டியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம்...

ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டம் முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டா சுங்கச்சாவடியில் அதிகாலையில் போலீசார் நடத்திய சோதனையில் கண்டெய்னர் லாரியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து,...

மத்திய பட்ஜெட் 2020 - தமிழகத்திற்கான பட்ஜெட்..!

சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்  என்றும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும்,...