​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளையும், அவரின் காதல் கணவனையும் வெட்டிய தந்தை

தெலுங்கானாவில் கூலிப்படையை ஏவி, மகளின் காதல் கணவனை தந்தை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி அடங்குவதற்குள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளையும், அவரது கணவனையும் பட்டப்பகலில் தந்தையே வெறித்தனமாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஐதராபாத் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த மாதவி என்பவர்...

தெலுங்கானா ஆணவக்கொலைக்கு 2.5 கோடி ரூபாய் பேரம் பேசிய கூலிப்படை: விசாரணையில் அம்பலம்

தெலுங்கானா பிரனய் ஆணவக் கொலைக்கு, கூலிப்படை முதலில் இரண்டரை கோடி ரூபாய் கேட்டதும், பின்னர் ஒரு கோடி ரூபாய் இறுதி செய்யப்பட்டதும், காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 14ஆம் தேதி நடந்த இந்தக் கொலை தொடர்பாக கர்ப்பிணி அம்ருத வர்சினியின் தந்தை மாருதி ராவ்,...

பிரதமராக பொறுப்பேற்றால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி

பிரதமராக பதவியேற்றதும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதே தமது முதல் கையெழுத்தாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மத்திய அரசின் பொறுப்பு என்றும், அதை...

காதல் கணவரை கொலை செய்த தந்தையை தூக்கில் போட வேண்டும் என அமிர்தவர்ஷினி வலியுறுத்தல்

தெலுங்கானாவில் தனது காதல் கணவரை தன் கண் முன்னே வெட்டிக் கொலை செய்த வழக்கில், தமது தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அமிர்தவர்ஷினி வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் தமது மகள் அமிர்தவர்ஷினி,...

கர்ப்பிணியின் கண் முன் காதல் கணவன் வெட்டிக் கொலைச் சம்பவத்தில் கர்ப்பிணியின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கைது

தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக கர்ப்பிணி முன் கணவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பீகாரில் கைது செய்யப்பட்டான்.  தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவை சேர்ந்தவர் மென்பொறியாளர் பிரனாய் குமார், இவர் அதே பகுதியை சேர்ந்த...

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - ஈஸ்வரன்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம்...

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. போட்டியிடும் - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை ஒட்டி, பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தை ஐதராபாத்தில் இன்று அமித்ஷா தொடங்கி...

தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர் வெட்டிக் கொலை

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் கொலை சம்பவம் போல, தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர் வெட்டிக் கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் என்பவர்...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்க முயற்சி - பிரதமர் மோடி கடும் தாக்கு

அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட பாஜக-வை சேர்ந்த தொண்டர்களுடன், பிரதமர்...

தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு

தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து தமது அமைச்சரவையின் ராஜினாமா கடிதங்களை ஆளுநரிடம் அளித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள்...