​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி எழுபத்து இரண்டு புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. பத்தேபூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. தெலுங்கானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.  199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் ஒரே...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று  இரவு சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின்போது மாடவீதியை சுற்றி காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் கோயில் ஜீயர்கள்...

தெலங்கானா, ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் இறுதி நாளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  தெலங்கானாவில்...

சந்திரபாபு நாயுடு உடன் தெலங்கானாவில் ராகுல் காந்தி பரப்புரை

சீன தயாரிப்புகளை தவிர்த்து, Made in Telangana என்ற பெயரில் பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ளூர் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்திருக்கிறார். தெலங்கானாவின் சூர்யாபேட் ((Suryapet)) மாவட்டத்தின் கோடாடு ((Kodad)) பகுதியில், தேர்தல்...

தெலங்கானாவில் தேர்தலையொட்டி நடத்திய வாகன சோதனையில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் சிக்கியது

தெலங்கானா மாநிலத்தில் தேர்தலையொட்டி காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரங்கல் மாவட்டத்தில் ஜங்கான் என்ற...

ஆந்திர முதலமைச்சர் உண்மையைத் திரித்துக் கூறுவதாகச் சந்திரசேகர ராவ் பேச்சு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உண்மையைத் திரித்துக் கூறுவதாகத் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், ஐதராபாத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ததாகவும் சைபராபாத் தனது சிந்தனையால் உருவானதாகவும் சந்திரபாபு பேசிவருவதாகத்...

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி ஐதராபாத்தைவிட்டு ஓடுவார் - யோகி ஆதித்யநாத்

இந்தியா தனது தந்தை நாடு என்றும், இங்கிருந்து வெளியேறுமாறு யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் தண்டூர் என்னுமிடத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது...

தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் இன்று ஆதரவு திரட்டுகிறார்

தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச...

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது - அமித் ஷா

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை  முன்கூட்டியே நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே முன்கூட்டியே தேர்தலைத்...

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் டிசம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது அம்மாநிலத்திற்கான...