​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமடைந்த காவல்துறையினரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பிலடெல்பியாவில் உள்ள நைஸ் டவுன்- டியாகோ என்ற இடத்தில், குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி  போலீசார்,...

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி மும்பை, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வான் பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்.எஸ்.ஜி கமாண்டோ வீரர்கள், குறிபார்த்து சுடும் நைப்பர்...

ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபரிதாபாத்தில் உள்ள நியூ இன்டஸ்டிரியல் டவுன் பகுதியின் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் விக்ரம்...

காஷ்மீர் மக்களிடம் துப்பாக்கியின்றி உரையாடுவதே ராணுவத்தின் விருப்பம்

காஷ்மீர் மக்களிடம், துப்பாக்கி இல்லாமல் உரையாடவே ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன்ராணும் சுமூகமாக...

காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த பக்ரீத் பண்டிகை

ஜம்மு-காஷ்மீரில், பக்ரீத் பண்டிகை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பக்ரீத் பண்டியையொட்டி நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பக்ரீத் பண்டிகை...

காஷ்மீரில் வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை

காஷ்மீரில் வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. 370வது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்டெர்னெட், செல்போன் உள்பட அனைத்து விதமாக தகவல் தொடர்பு...

துப்பாக்கி சுடும் போட்டி - பதக்கங்களை வென்றவர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் பாராட்டினார். ரைபிள் கிளப் சார்பில் கோவையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி வரை மாநில...

மேடையில் தேசிய கீதம் ஒலித்தபோது, முட்டியிட்டு நின்ற அமெரிக்க வீரர் இம்போடன்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெறுப்புணர்வை தூண்டும் செயல்களில் ஈடுபடுவதாக கூறி, அந்நாட்டை சேர்ந்த இளம் விளையாட்டு ஒருவர் தேசிய கீதம் ஒலித்தபோது, பதக்க மேடையில் முட்டிப்போட்டு நின்றுள்ளார். பெரு நாட்டின் தலைநகர் லீமாவில், அண்மையில் நடந்த ‘பான் அமெரிக்கன் கேம்ஸ்’ விளையாட்டு போட்டியில்...

நார்வேயில் மசூதிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு..!

நார்வேயில், மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் புறநகர் பகுதியில் உள்ள அல்- நூர் இஸ்லாமிக் மசூதியில் நேற்று, முஸ்லீம்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதியின் வாசல் வழியாக 2 சிறிய ரக துப்பாக்கிகளுடன் நுழைந்த...

காஷ்மீரில் எந்தவொரு இடத்திலும் வன்முறையில்லை: காஷ்மீர் டிஜிபி

ஜம்மு-காஷ்மீரில், எந்தவொரு இடத்திலும் வன்முறை நிகழவில்லை என்றும், கடந்த 6 நாட்களில், ஒரு தோட்டா கூட போலீசாரால் பயன்படுத்தப்படவில்லை என்றும், காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் (Dilbag Singh) தெரிவித்திருக்கிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு, அம்மாநிலம், ஜம்மு-காஷ்மீர்,...