​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை தூத்துக்குடி பயணம்..!

தூத்துக்குடிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூவை தொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரனும், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றனர். இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - விஜயகாந்த்

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்...

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் - இந்து முன்னணியினர் இடையே வாக்குவாதம்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தின் போது, இந்து முன்னணியினர் அங்கு வந்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்து...

நிர்வாண நபரை காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ

அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகரில் காவல் அதிகாரி நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மார்கஸ் டேவிட் பீட்டர்ஸ் ((Marcus-David Peters)) என்பவர் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதிநேர காவலாளியாக பணிபுரிகிறார். இவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சிறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் 2வது நாளாக உண்ணாவிரதம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி...

அமெரிக்காவில் 2 நாட்களாக வீட்டில் அடைத்து பெண் சித்ரவதை

அமெரிக்காவில் 2 நாட்களாக வீட்டில் அடைத்து துப்பாக்கி முனையில் சித்ரவதை செய்த காதலனை, சமயோசிதமாக சிந்தித்து பெண் ஒருவர் போலீசில் சிக்க வைத்துள்ளார். புளோரிடாவில் கரோலின் ரிச்லே (( Carolyn Reichle )) என்ற பெண்ணை, அவரது காதலன் ஜெரெமி பிளாய்ட் ((Jeremy...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கடலில் இறங்கி கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குரும்பனை பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலுள்ள இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி...

இந்திய ராணுவ முகாம் மீது நள்ளிரவில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவனும் உயிரிழந்த நிலையில், மற்றொரு இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். புல்வாமாவில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்....

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதியுதவியையும் வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை  சந்திப்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். 5வது...

கடப்பாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். கடப்பா மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கடத்தல்காரர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் வன ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து...